Friday, 9 May 2014

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும். இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள். மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சர்யம்.
______________________________

பழமொழி

பழமொழி: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் பறந்துபோகும் பத்து என பின்வருவனவற்றை ஔவையார் கூறுகிறார்.

மானம்
குலம்
கல்வி
வன்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி (பதவி)
தளன்மை (இளகிய மனம்)
காமுறுதல்
______________________________

ழ : ழகரம்

ழ : ழகரம்

கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் எதோ பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.

”தமி” என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு சிறந்த உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம்.

நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த “ழ” உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.

இங்கு மலையாளம் தமிழின் பிள்ளை போன்றது. இருந்தும் மலையாள பிரபல பாடகர் யேசுதாஸிற்க்கு ல, ள, ழ என்பவற்றை வேறுபிரிக்க சிரமப்படுவார். ”பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா” பாடலின் போது வைரமுத்துவுடன் சிறு கருத்து வேறுபட்டுக்கு உள்ளானார்.

மண்டரின் இன மொழிகள் வரும் “ழ” ஆனது தமிழில் வருவது போல் ழகர உச்சரிப்பு இல்லை. மற்ற எந்த மொழியிலும் இல்லை. எடுத்துக்காட்டாக உலகப்பொது மொழியாக கருதப்படும் ஆங்கிலத்தில் கூட “ழ” விற்கு “zha” என்று தான் பாவிக்கிறோம்.

சிறப்பு 'ழ'கரமே!

தமிழின் சிறப்பே 'ழ'கரம் என்பார்;
தமிழ் என்ற சொல்லிலே வருமே!

இந்த எழுத்து வராது சிலருக்கு;
இந்த எழுத்து 'ய'கரமாய் ஆகும்!

இந்த எழுத்து சரியாக வந்திட,
இந்தப் பயிற்சி அளித்திடுவர்!

அது: 'ஏழைக் கிழவன் வாழைப்
பழத்தில் வழுக்கி விழுந்தான்!'

கிழக்கு திசையில் பயணித்து,
பிழைக்கப் போகின்ற ஒருவன்,

மழை வந்ததால், ஓர் ஓரத்தில்
மழை படாது ஒதுங்கும் சமயம்,

வந்த பெரியவர் கேட்டதற்குத்
தந்த பதில்களைப் பாருங்கள்!

'எங்கே போறே?' - 'கெயக்க!'
'எதுக்குப் போறே?' - 'பொயக்க!'

'ஏன் ஒதுங்கறே ?' - 'மயக்கி!'
'இப்படிப் பேசறே?'- 'பயக்கம்!'
______________________________

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை*த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!
______________________________


அளவைகள்

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.



1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -

10000000000000000000 = பரார்த்தம் -

100000000000000000000 = பூரியம் -

1000000000000000000000 = முக்கோடி -

10000000000000000000000 = மகாயுகம் -
______________________________


வாழ்க தமிழ்...

"யாழினிது குழலினிது என்பார் தம் மக்கட் சொற் கேளாதோர் "

இது முதுமொழி.இதைப் போல அது நன்று, இது நன்று ,இதனால் தான் முடியும் அதனால்தான் முடியும் என்பார் சிலர் .

எதானாலும் முடியாதது எம் தமிழால் முடியும்.

ஆகவே ,தாய் மொழியை மறந்தோர் உயிர் உணர்வை இழந்தோர் ....நடமாடுவது வெறும் காற்று புழங்கும் பிண்டம் மட்டுமே.

நண்பர்களே...வேறு மொழி பேசி உழையுங்கள் ...சேமியுங்கள்...நன்றாக வாழுங்கள்.அது காலத்தின் கட்டாயம்.

ஆனால் தாய் மொழியை நேசியுங்கள் .சுவாசியுங்கள்.ஏனென்றால் உங்கள் உயிருக்கு அது தான் ஆதாரம்.

மொழி ஒரு இனத்தின் கலாசாரச் சின்னம்.பாரம்பரியத்தின் அடையாளம்.

கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் இரு கண்கள்.அவற்றை சிதையாமல் பேணுங்கள்.

காக்கைக்கா காகூகை

காக்கைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை,
கோக்குக்கூக், காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
-புலவர் காளமேகம்-
______________________


(1)காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை
(2)கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை

பாடல் பொருள்:

இரவில் காக்கைக்கு ஆகாது கூகை (ஆந்தை). அதாவது காக்கையும் கூகையும் பகையானவை. பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப் போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வெற்றியும் இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது. என்று பாடல் பொருள் தருகிறது. அதே நிலையில் சொல் வகையாலும் அழகு பெறுகிறது. இதனை உணர்ந்து, இதே வகையில் நாமும் சொல்லணி வயப்படுவோம்.
______________________________

தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள்

“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”
கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்-ஆசான் அருணகிரிநாதர்
______________________________