Sunday, 11 May 2014


அகதி - ஏதிலி
அக்கினி நட்சத்திரம் - எரிநாள்
அங்கவஸ்திரம் - மேலாடை
அங்குலம் - விரலம்
அசரீரி - உருவிலி
அஞ்சலி - கும்பீடு, இறுதி வணக்கம்
அத்தியாவசியம் - இன்றியமையாமை
அதிகாரபூர்வம் - அதிகாரச் சான்று
அதிசய மனிதர் - இறும்பூதாளர்
அதிர்ஷ்டம் - ஆகூழ்
அத்வைதம் – இரண்டன்மை
அநேக – பல
அநேகமாக - பெரும்பாலும்
அந்தரங்கம் - மருமம், கமுக்கம், மறைமுகம்
அந்தஸ்து - தகுதி
அபயம் - ஏதம், கேடு
அபராதம் - தண்டம்
அபாயம் - இடர்
அபிப்ராயம் - கருத்து, ஏடல்
அபிமானம் – நல்லெண்ணம்
அபிவிருத்தி – மிகுவளர்ச்சி
அபிஷேகம் – திருமுழுக்கு
அபூர்வம் – அருமை
அப்பியாசம் - பயிற்சி
அமரர் - நினைவில் உரை, காலஞ் சென்ற
அமாவாசை - காருவா
அமோகம் - மிகுதி
அரபிக்கடல் - குட கடல்
அராஜகம் - அரசின்மை
அர்ச்சகர் - வழிபாட்டாசான்
அர்த்தம் - பொருள்
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசகுனம் - தீக்குறி
அவசியம் – வேண்டியது, தேவை
அவதாரம் – தோற்றரவு
அவயவம் - உடலுறுப்பு
அற்புதம் - இறும்பூது, நேர்த்தியான
அனுபல்லவி . துணைப் பல்லவி
அனுபவம் - பட்டறிவு
அனுபவித்தல் - நுகர்தல்
அனுமானம் – உய்த்துணர்வு
அனுஷ்டி – கடைபிடி, கைக்கொள்
அன்னாசி – செந்தாழை
அன்னியம் – அயல்
அஸ்திவாரம் - அடிப்படை

No comments:

Post a Comment