Sunday, 11 May 2014

முதலில் அச்சான திருக்குறள்

கி பி 1812 இல் முதன் முதலில் அச்சான திருக்குறள் - மூலபாட முகப்பும் கடவுள் வாழ்த்துப் பகுதியும்.

மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும்.

இதனுடன் நாலடியாரும் சேர்த்தே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
திருக்குறள் எழுதிய வண்ணம் :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் தன் குறளை எப்படி எழுதியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்ததுண்டா?
படத்தைக் காணுங்கள். தலை சுற்றுகிறதா?
காலந்தோறும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர் ,
சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்.

தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து
வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும் என்பதைக் காணுங்கள்.
அப்படத்தில் உள்ள குறள் கீழே :-

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.

ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்





பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். -பாரதி

பழங்கதைகள் பேசியே அப்படியே இருந்துகொண்டிருக்கிறோம் !
______________________________

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
______________________________

No comments:

Post a Comment