Sunday, 11 May 2014

ஊக்கமது கைவிடல்

ஊக்கம் என்து எதையும் வெற்றிகரமாக முடிப்பேன் எனும் உறுதிகொள்ள கூடியதுமான தன்னம்பிக்கையாகும். ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை செல்வத்தை இழந்தாலும் பலவிதமான இழப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் அவன் தன்பால் உள்ள ஊக்கம் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. அவனது ஊக்கத்தை இழந்தால் அவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அனைத்து செல்வங்களையும் இழந்தது போல ஆகும்.
ஒருவன் மனஉறுதியோடு தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு மற்றவர் முன்னிலையில் சோர்வைக் காட்டாது இருக்க வேண்டும். எவராக இருந்தாலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டு அஞ்சாது ஊக்கத்துடன் எதிர்த்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

முதுபெரும் ஞானியான திருவள்ளுவர் தமது திருக்குறளில் ஊக்கம் உடைமை அதிகாரத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

உடையார் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று.

ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்;மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும். உயர்வு நடக்காவிட்டாலும் எண்ணத்தை கைவிடக்கூடாது.

No comments:

Post a Comment