Sunday, 11 May 2014

சித்திரக்கவிகள் :

இந்தப் பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்ளது.

மேலிருந்து கீழாக முதல் எழுத்துக் களையும் கீழிலிருந்து மேலாகக் கடையெழுத்துக் களையும் சுற்றி சுற்றி நான்கு முறைப் படித்தாலும் சரியாக வரும்.

கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா

பொருள் :

வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள்
விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.
அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி
முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்
______________________________

No comments:

Post a Comment