Thursday 30 May 2013

அறத்துப்பால்

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

Friday 24 May 2013

ஆத்திசூடி

Uyir Ezhuthu ஆத்திசூடி English translation
அறம் செய விரும்பு Desire to do good things
ஆறுவது சினம் Anger is to be controlled
இயல்வது கரவேல் Help others in any way you can
ஈவது விலக்கேல் Always be charitable
உடையது விளம்பேல் Do not boast about what you have
ஊக்கமது கைவிடேல் Do not give up hope/effort
எண் எழுத்து இகழேல் Respect learning
ஏற்பது இகழ்ச்சி Begging is despicable
ஐயமிட்டு உண் Give alms before eating
ஒப்புர வொழுகு Be virtuous
ஓதுவது ஒழியேல் Do not give up learning
ஒள ஒளவியம் பேசேல் Do not talk bad about others
அஃகஞ் சுருக்கேல் Never cheat on food

Tuesday 21 May 2013

தமிழ் அன்னை

இடம் :காஞ்சிபுரம் கூரம் கிராமத்தில் தமிழ் அன்னை கோயில்.