Sunday 20 December 2015

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

May 1, 2012
- எஸ். இராமச்சந்திரன் rss_icon16.jpg



(தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.)

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பேசுகையில், சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் முழுமதி நாள் (பௌர்ணமி) நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள்தாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்தினைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, சித்திரை, கார்த்திகை என்ற இரு மாதங்களின் பெயர்கள்தாம் நட்சத்திரப் பெயர்கள் என்றும், பிற மாதங்களின் பெயர்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் பூசை என்றும், மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் மகம் அல்லது மகை என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் வினவியுள்ளார்.

கருணாநிதி தமக்குத் தாமே ‘முத்தமிழ் அறிஞர்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டவர். முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும். நாடகத் தமிழ் நூல்களுள் தலையாயது சிலப்பதிகாரம். தாம் சிலப்பதிகாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றும், சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்தும், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைத்தும் சிலம்புக்குப் பெருமை சேர்த்தவர் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்பவர் பூம்புகார் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதி. சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் வருகிற ஒரு குறிப்பை (கால்கோட்காதை – வரி. 25-26) அவருக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மீது படையெடுத்துப் புறப்படுவதற்கு நல்ல நேரம் (முகூர்த்தம்) குறித்துக் கொடுக்கிற சோதிடன் “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோன்” எனக் குறிப்பிடப்படுகிறான். ஐவகைக் கேள்வி என்பது பஞ்சாங்க அறிவாகும். “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று” என்றால் 12 ராசிகளிலும் இருக்கின்ற கிரக நிலைகளைக் கற்று என்று பொருளாகும். ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளை மதி என்றே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது சித்திரை மதி தொடங்கி பங்குனி மதி முடிய இருக்கிற 12 ராசிகள் என்பது பொருளாகும்.

மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று. தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள்என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் வழங்குகிறMonth (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும். எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும். அதே சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும். அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும். இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.

விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள். இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென கருணாநிதியாலேயே போற்றப்பட்ட – போற்றப்படுகிற(?) ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமது Early Tamil Epigraphy என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது. அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு. அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது. மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அதற்கு அடுத்த நட்சத்திரமான சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.

பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது. சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு. சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது. சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும். ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும். இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது. அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம், ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழிலோ அற்பசி, ஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது. இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.

கார்த்திகையைக் கருணாநிதியே ஏற்றுக்கொண்டு விட்டதால் அதைப் பற்றி நாம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.

மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி, தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது. பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று. மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது. ‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் தை என்று எப்படிப் பெயர் பெற்றது என்பது கருணாநிதியில் கேள்வி. பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.

தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது. புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும் தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு. தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதாகச் சட்டம் இயற்றிய கருணாநிதிக்கு திஷ்ய நட்சத்திரத்தின் பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.

கருணாநிதிக்கு வேண்டியவரான ஐராவதம் மகாதேவன், திஷ்யம் என்ற நட்சத்திரப் பெயர் சங்க காலத் தமிழகத்தில் ஆட்பெயராகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்றும், திஸ்ஸன், திய்யன், தீயன் என்ற வடிவங்களில் இப்பெயர் வழங்கியுள்ளது என்றும் நாம் மேலே குறிப்பிட்ட நூலில் எழுதியுள்ளார். கருணாநிதி, ஐராவதம் மகாதேவன் அவர்களைக் கலந்து ஆலோசித்திருந்தால், பூசை என்றல்லவா மாதப் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார். அவர்தாம் அனைத்தும் அறிந்தவர் என்ற எண்ணம் உடையவராயிற்றே?

தை மாதம், ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று பிறக்கிறது என்ற கணக்கீடு பஞ்சாங்கக் காரர்களால் தாம் கணித்துச் சொல்லப்படுகிறது. அதாவது, கருணாநிதியால் பழித்துப் பேசப்படுகிற ‘ஆரிருமதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோர்களால்’தான் சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்குகிற நாள் என்ற அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறதே தவிர ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வானநூல் கல்வியில் தேர்ச்சி பெற்ற கோள் ஆய்வு நிபுணர்களால் அல்ல. பஞ்சாங்கக் காரர்களால் நிர்ணயிக்கப்பட்ட பழம் பஞ்சாங்கக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த தை முதல் நாளை மட்டும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, அதனைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று புதிதாக நாமகரணம் செய்கிற அளவிற்கு அடாவடித்தனம் உள்ள ஒருவர், எப்படி அறிஞர் ஒருவரைக் கலந்தோசிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?

ஐராவதம் மகாதேவனைக் கலந்து ஆலோசித்திருந்தால், டிசம்பர் 20ஆம் தேதியன்றே சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது என்பதால் டிசம்பர் 20ஆம் தேதியைத்தான் தை முதல் நாளாக நிர்ணயித்து, அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றாவது ஐரோப்பிய வானநூல் அறிவுக்கும் கருணாநிதியின் ஆணவத்திற்கும் ஒத்திசைகிற வகையில் ஒரு வழியையாவது சொல்லிக் கொடுத்திருப்பார்.

மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது. கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம். ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம். ”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.

கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம்என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள். நம் முன்னோர்களைப் பற்றி இவர் புரிந்து கொண்டது, தமிழைப் புரிந்து கொண்டதுபோல் இவ்வளவுதான்.

உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது. எந்நேரமும், எந்த ஆதாயத்திலும் தம் பங்கு என்ன என்ற சிந்தனையிலேயே மூழ்கி இருப்பவர்களுக்குப் பங்குனிக்கான பெயர்க் காரணம் புரியாமல் போவதில் வியப்பில்லை.

இறுதியாக ஒரு விளக்கம். இந்த நட்சத்திரப் பெயர்களும், மாதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாக இருப்பதால் அவை தமிழர்களுக்கு அன்னியமானவை என்ற எண்ணம் சில தமிழ் அறிஞர்களிடையேகூட நிலவுவதாகத் தெரிகிறது. பழமையான தமிழ்க் கணியர்களான (ஜோதிடர்களாகிய) வள்ளுவர்கள், தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதேபோன்று, வள்ளுவர்கள் வானவியல் அறிவை அனைத்திந்தியக் கல்விப் புலமாக உருவாக்குவதற்காக, சமஸ்கிருத மொழி வடிவில் இப்பெயர்களைப் பதிவு செய்திருக்கலாம். இக்காரணத்தினாலேயே வானவியல் அறிவும், பஞ்சாங்க அறிவும் தமிழர்களுக்கு அன்னியமாகிவிடா. மொழியியல் அறிஞர்கள்தாம் இது குறித்து ஆய்ந்து விளக்கம் அளிக்கத்தக்கவர்கள்.

(இக்கட்டுரை, ஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் சென்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்).

கட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர்.

மறையும் மறையவர்கள் (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு),தோள்சீலைக் கலகம் (அ.கணேசனுடன் இணைந்து எழுதியது) ஆகிய நூல்களின் ஆசிரியர். சென்னையில் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) என்ற ஆய்வு மையத்தை நடத்தி வருகிறார்.



__________________
Admin


Guru

Status: Offline
Posts: 14716
Date: May 1, 2015

RE: பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்

Permalink

vedanishthananda on May 18, 2012 at 7:36 am

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

சந்தஸ் : வேதத்தின் பாதம்

மாதப் பெயர்கள்

மார்கசீர்ஷி என்பது மார்கழி என்றானதாகச் சொன்னதில், பாஷா வித்யாஸங்கள் நன்றாகத் தெரிந்தன அல்லவா?தமிழில், அநேகமாக ஒவ்வொரு மாஸப் பெயரிலுமே, அந்த பாஷையின் தனி லக்ஷணப்படி மூலமான ஸம்ஸ்கிருதப் பேர் எப்படி மாறுகிறதென்று தெரிகிறது.

பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமியன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். அநேகமாக சித்ரா நக்ஷத்தரத்தன்றுதான் சித்திரை மாஸத்தில் பௌர்ணமி வரும். சித்ரா பூர்ணிமை ஒரு விசேஷ நாளாக இருக்கிறது. தமிழில் சித்திரை என்ற மாஸப் பெயர் மூலத்துக்கு மாறாமலே இருக்கிறது. விசாக சம்பந்தமுள்ளது வைசாகம். விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம்தான் வைசாகி. மதுரை மருதையாவது போல், ஸம்ஸ்க்ருத வைசாகி தமிழில் வைகாசியாகிறது. (பெங்காலில் பைஷாகி என்பார்கள்) வைகாசி விசாகமும் உத்ஸவ நாளாக இருக்கிறது. நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் அன்றுதான். இப்போது, புத்த பூர்ணிமா என்பதாக அதற்கு விசேஷம் கொடுத்திருக்கிறார்கள்.

அநுஷ நக்ஷத்ர ஸம்பந்தமுள்ளது ஆநுஷீ. அந்த நக்ஷத்ரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற ஆநுஷீமாஸம், தமிழில் ஆனி ஆகிறது. ஷகாரம் தமிழில் உதிர்ந்துவிடுகிறது.

ஆஷாடத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் – முன்;உத்தரம் -பின். ‘பூர்வாஷாட’த்தில் ‘ர்வ’கூட்டெழுத்துச் சிதைந்தும், ‘ஷா’உதிர்ந்தும், தமிழில் ‘பூராடம்’என்கிறோம். இப்படியே உத்தராஷாடத்தை ‘உத்திராடம்’ என்கிறோம். இந்த ஆஷாடங்களில் ஒன்றில் பௌர்ணமி ஸம்பவிப்பதால், ‘ஆஷாடீ’எனப்படுவதுதான், நம்முடைய ‘ஆடி’ மாஸம்.

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்ரத்தைக் குறித்தது. முதலில் உள்ள ‘ச்ர’தமிழில் அப்படியே drop -ஆகி, ‘வண’த்தை ‘ஒணம்’என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமாதலால், ‘திரு’என்ற மரியாதைச் சொல்லைச் சேர்த்துத் திருவோணம் என்கிறோம். (இவ்வாறே ‘ஆர்த்ரா’என்ற சிவபெருமானின் நக்ஷத்ரத்தை ஆதிரை என்றாக்கி, அதற்கும்’திரு’ சேர்த்துத் ‘திருவாதிரை’என்கிறோம். திரு அச்வினி, திருப் பரணி என்றெல்லாம் சொல்வதில்லை. கார்த்திகை மாஸ தீப உத்ஸவத்தை மட்டும் திருக்கார்த்திகை என்றாலும், மற்ற சமயங்களில் திரு போடாமல் கார்த்திகை என்றே சொல்கிறோம். ஹரி-ஹரபேதம் பார்க்காத தமிழ் மரபு அவ்விருவர் நக்ஷத்ரத்துக்கு மட்டும் எப்போதும் ‘திரு’போட்டு மரியாதை தருகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்) அநேகமாகப் பௌர்ணமி ச்ரவணத்திலேயே வருவதான ‘ச்ராவணி’தான், ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.

இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு ‘ஸிம்ஹளம்’என்பது ‘ஈழம்’என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.

‘ஸீஸம்’ என்பதுதான் ‘ஈயம்’என்றாயிருக்கிறது. ‘ஸஹஸ்ரம்’என்பது கன்னடத்தில் ‘ஸாஸிரம்’ என்றாயிருக்கிறதென்றால், அந்த ‘ஸாஸிரம்’ தமிழில் ‘ஆயிரம்’என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.

‘ஆயிர’த்தைச் சொன்னதால் மற்ற எண்களைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று முதலியன ஏக, த்வி, த்ரி முதலான ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. பஞ்ச-அஞ்சு;அஷ்ட-எட்டுஎன்பன மட்டும் ஸம்பந்தமிருக்கிறாற்போல் தோன்றுகிறது. இங்கிலீஷ் two, three என்பவை ஸம்ஸ்கிருத த்வி,த்ரி ஸம்பந்தமுடையவைதான். Sexta, hepta, octo, nove,deca என்பதாக ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து சம்பந்தத்தைச் சொல்லும் வார்த்தைகள் ஷஷ்ட, அஷ்ட, நவ, தச என்ற ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்தே வந்திருப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ஆனால் முதல் எண்ணான one என்பது ‘ஏக’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தெலுங்கிலோ தமிழ் ஒன்று-வின் ‘ஒ’ வும், ஸம்ஸ்கிருத ‘ஏக’வின் ‘க’வும் சேர்ந்து ‘ஒகடி’என்றிருக்கிறது. இதெயெல்லாம் பார்க்கும்போது இனத்தில் எல்லாம் ஒன்று என்பதுபோல், திராவிட -ஸம்ஸ்கிருத பாஷைகளுக்குங்கூடப் பொதுவான ஒரே மூலபாஷை இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஸிம்ஹளத்தில் ‘ஸிம்ஹ’என்பதில் ஸ,ஹ இரண்டும் drop -ஆகி ‘இம்ளம்’, ‘ஈளம்’ என்றாகி, ள வும் ழ வாகி ஈழம் என்று ஏற்பட்டிருக்கிறது.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி என்றாயிற்று. ‘அஷ்ட’ என்பது ‘அட்ட’என்றாவது தெரிந்ததுதானே?உத்தர ப்ரோஷ்டபதம் உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்ரங்கள் ஒன்றிலோ, அதை ஒட்டியோ பௌர்ணமி ஏற்படுகிற ப்ரோஷ்டபதீ என்பதே புரட்டாசி என்று எப்படியெப்படியோ திரிந்து விட்டது.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ‘ ஆச்வயுஜீ ‘ அல்லது ‘ ஆச்வினீ ‘ தான், நம் ‘ ஐப்பசி ‘.

கிருத்திகாவுக்கு adjective -ஆன கார்த்திகம்தான் கார்த்திகை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. முக்காலே மூன்று வாசி திருக்கார்த்திகை தீபோத்ஸவம் பௌர்ணமியாகத்தானே இருக்கிறது?மார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் ‘பூச’ சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லை!) புஷ்ய ஸம்பந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்துக்குத் திவ்யம் என்றும் பெயர். பூர்ணிமை திஷ்யத்திலே வரும் மாஸம் ‘தைஷ்யம்’. அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய்த் தமிழில் ‘தை’மட்டும் நிற்கிறது.

மாசி மகம் பௌர்ணமியில்தான் வருகிறது. மாகமாஸம் என்று மகநக்ஷத்ரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிறது. வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று C யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் C யில் முடித்து, மாசி என்று சொல்கிறோம்.

பூர்வ பல்குனம், உத்தர பல்குனம் என்ற இரண்டு நக்ஷத்ரங்கள் உண்டு. இரண்டிலும் நாம் முக்யமான பெயரான பல்குனம் என்பதைத் தள்ளவிட்டு, ‘பூர்வ’த்தை ‘பூரம்’ என்றும், ‘உத்தர’த்தை உத்தர நக்ஷத்திரம் என்றுமே சொல்கிறோம். ஆனால், இந்த நக்ஷத்ரங்களில் ஒன்றில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸத்தை மட்டும் “பல்குன”என்ற சப்த ஸம்பந்தமுள்ள “பங்குனி” என்ற பெயரால் குறிக்கிறோம். அந்தப் பௌர்ணமியில்தான் பங்குனி உத்தரம் என்று திருக்கல்யாண உத்ஸவம் செய்கிறோம்.

இப்படிப் பன்னிரண்டு மாஸப் பெயர்களைப் பார்த்தாலே, ஸம்ஸ்கிருதத்திலுள்ள எந்தெந்த ஒலிகள் தமிழில் எப்படியெப்படி மாறும் என்பது தெரிந்துவிடும்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று.



உலகின் முதல் நாகரீகம்! ஆதிவரலாற்றைக் கூறும் ஆதிச்சநல்லூர்...



திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



இந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?.. ஆம் அதுதான் உண்மை ...



இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது



பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போதுமண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்கு மேலும் தெரியும்.



1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.



இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...



இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.



பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்துதேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர். பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.



மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.



மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.



மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான். எகிப்தில் கிடைத்த தமிழ் எழுத்துருவுகள் பொறிந்த மட்பாண்டத்தின் ஒரு பாகம்எகிப்தில் கிடைத்த தமிழ் எழுத்துருவுகள் பொறிந்த மட்பாண்டத்தின் ஒரு பாகம்



அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

http://ta.wikipedia.org/wiki/வளரிஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பயன்படுத்தப்பட்ட பூமராங் (வளரி)ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பயன்படுத்தப்பட்ட பூமராங் (வளரி)

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை வேளாண்மை செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.



ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..



”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்”



எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.



இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.



இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.





இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.



ஆனால், இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?,



இந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்...



- மே.இளஞ்செழியன்

Wikipedia article: http://en.wikipedia.org/wiki/Adichanallur

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்

தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது. இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன.

இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள் இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.

இத் தளங்களைக் காலக்கணக்கிடுவது (dating) இன்னமும் முடிவாகவில்லை ஏனென்றால் இந்த ஆகழாய்வில் இருந்து எந்த புலப்பாட்டுச் சான்றும் கிட்டவில்லை. இருந்தபோதிலும், ஒரு சில தளங்கள் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு காட்டி உள்ளன. அவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் சான்றளிப்பது போல் 1,600 BCE க்கும் முற்பட்டதாக இல்லை என முடிவு கட்டி உள்ளன. அகழாய்வு செய்யப்பட்ட இரும்புக் காலத் தளங்களிலேயே ஆதிச்சநல்லூர் ஆகழாய்வுகள் சிறப்பு கவனத்தைப் பெறத் தக்கனவாக உள்ளன. அதுவே தமிழகத்தில் அண்மைக் காலம் வரையில் அகழாய்ந்த தளங்களிலேயே மிகப் பழமையானது. அண்மைக் கால அகழாய்வின் முடிவு, தமிழ் நாட்டில் தமிழ் நாகரிகத்தின் பழமை, வளர்ச்சி ஆகியவற்றின் மீது ஒரு மீவலிய விளைவை பெற்றிருந்தது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சுற்றுப் பகுதிகள் கற்கால ஊழியில் தொல்பழமையான இடத்தைப் பெற்றிருந்தன. சிறப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் சுற்றுப் பகுதிகள் நுண்கற்காலத்து மாந்தர் வாழிடங்களின் சான்றெச்சங்களைக் (vestiges) கொண்டுள்ளன. அங்கு நுண்கல் வகை சார்ந்த கற்கருவிகளை உள்ளிணைத்த மணற்குன்றுகள் உள்ளன. அக் கற்கருவிகள் செம்பட்டைக் கல் (Jasper), படிமக்கல் (agate), சூதுபவழம் (Carnellian), படிகக்கல் (crystal) மற்றும் கல்மம் (quartz) ஆகிய குறைமணிக் (Semi precious) கற்களால் ஆனவை. இவ்வகை கற்கருவிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அவை சற்றொப்ப 12,000 முதல் 10,000 B.C.E. காலத்தன எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே நம் முந்து - வரலாற்று மூதாதைகள், சிறப்பாக, திராவிடர்கள் பிந்து அரப்பா நாகரிகக் கால பண்பாட்டுடன் ஒப்பிடத்தக்க பண்பாட்டுத் தனிகூறுகளைக் கொண்டிருந்த இடம். அரப்பா நாகரிகப் பண்பாட்டின் வீழ்ச்சி தமிழ் நிலத்தின் தென்கோடியில் அமைந்த ஆதிச்சநல்லூரின் திராவிட நாகரிகப் பண்பாட்டின் எழுச்சியோடு ஒன்றிப்பதாகத் (coincide) தோன்றுகின்றது.

இங்ஙனமாக, ஆதிச்சநல்லூர் தமிழ் நிலத்துத் தொடக்க வரலாற்று வரைபடத்தில் முந்து தலைமை நிலையைப் பெறுகின்றது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் 2004 - ஆம் ஆண்டு மற்றும் அதைத் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் செய்திப் பத்திகளில் இடம் கொண்டன, அதோடு அரசின் கவனத்தையும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்தன. தொல்லியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டில் ஆதிச்சநல்லூர் ஒரு தொடரல்லாத தடைநிலை (checkered) வரலாறு உடையது.

இனி, ஆதிச்சநல்லூர்த் தொல்லியல் அகழாய்வு வரலாற்றையும் அவற்றின் வரலாற்று முதன்மையையும் ஆய்வோம். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து 24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.

தொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன. பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.

1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும்.

அண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன.

பேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும் புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன.

மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது.

இத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொண்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.

இத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன.

ஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன.

இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.


இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர்:
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி,
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு).

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர்
சேசாத்திரி

பார்வை நூல்: கல்வெட்டு இதழ், ஏப்ரல் 2009.

ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்?

Posted by : தமிழ் வேங்கை


aathijanallur1.jpg
பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது.

கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தன? எந்த ஊரை பழைய கொற்கையாக, பழைய வஞ்சியாக, பழைய முசிறியாக, நாம் கருத முடியும் என்றால், நாம் நம்முடைய
அடையாளங்களாக, தேடி, மீளாய்வு செய்து,இன்னும் சொல்லப்போனால், இன்று இருப்பதை வைத்து இருப்பதைக் கொண்டு அங்கு இருப்பதை நாம் அடையாளம் காணமுடியாது. கொற்கையைப் பார்த்துவிட்டு, கொற்கையிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஆதிச்சநல்லூர் ஊர் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தமிழகத்தினுடைய மிகத் தொன்மையான ஒரு புதைமேடு, 114 ஏக்கர் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவும் இடுகாடுதான். முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

ஓர் ஊரில் இவ்வளவு பெரிய இடுகாடு இருக்கிறதென்றால் இதை ஒட்டி,மிகப்பெரிய மக்கள் வசித்திருக்கணுமில்லையா? ஒரு நகரம் இருந்திருக்கணுமில்லையா, இன்று சிந்து, ஹரப்பாவை ஆய்வு செய்யும்போது, என்ன சொல்றாங்க, ஹரப்பா, மொஹஞ்சதாரோ என்ற நகரம், இவ்வளவு செழிப்பாக இருந்திருந்தால் இங்கு ஓர் இனம் வாழ்ந்திருக்கணும், அந்த இனம் பண்பாட்டில், மேலோங்கியிருக்கணும்,கட்டடத்திலும் சரி எத்துறைகளிலும் சரி உயர்ந்து விளங்கியிருந்தால்,இவ்வளவு பெரியதைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்ப இவ்வளவு பெரிய நகரம் ஆதிச்சநல்லூருக்குப் பக்கத்தில் என்ன இருந்தது? எந்த நகரம் இருந்தது? எந்த நகரத்தினுடைய இடுகாடு இது? பக்கத்தில் இருந்த,இன்றைக்கும் இருக்கிற, நகரம் கொற்கை என்றால் ஒரு காலத்தில் கொற்கை பெரிய நகரமாக, பெரிய விரிவோடு இருந்ததாக இருந்தால் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆதிச்சநல்லூர் போன்ற ஒன்று பக்கத்தில் இருக்க முடியும்.

இந்த ஆதிச்சநல்லூர் ஊரைப் பார்க்கும்போது, ஆதிச்சநல்லூரைப் பற்றி கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டில் ஆதிச்சநல்லூரைப்பற்றிச் சொல்லும்போது குறிப்பு வருகிறது. வெள்ளூர் ஆதிச்சநல்லூர் எனக் குறிப்பிடுகின்றனர். வெள்ளூர் என்று குறிப்பிடும் சொல் சங்ககால இலக்கியத்திலும் வரக்கூடிய சொல். இந்த வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்கிற கிராமத்தை ஏன் வெள்ளூர்னு குறிப்பிடுறாங்கன்னா, வெள்ளூர் என்ற இன்றைய பஞ்சாயத்திற்குட்பட்டதாக இந்த ஆதிச்சநல்லூர் இருக்கிறது. ஆனால் வெள்ளூர் என்ற சொல் பழந்தமிழ்ச் சொல். சங்க இலக்கியத்தில் வரக்கூடியதாக இருக்கிறது. கொங்கராயக்குறிச்சி பழமையான ஆதிச்சநல்லூரின் எச்சங்கள் இருக்கின்றது, கிடைக்கக்கூடும், அதே ஊரில் அவர்கள் சொன்னார்கள்:-_ இங்கே ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆறுதான் திசைமாறி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் நதியானது பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஓடத் தொடங்கியது. பொன்னையாப்பிள்ளை என்பவர் இந்த ஆற்றினுடைய கரையை மாற்றி திசை திருப்பி ஆற்றினுடைய போக்கை மாற்றினார் என்பதால் கோட்டை கட்டிக்கச் சொல்லி உரிமை கொடுத்தார்கள். அப்படி கோட்டை கட்டிக்கச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட உரிமையின் காரணமாக சிறீவைகுண்டம் பக்கம் கோட்டை கட்டி,பொன்னையாப்பிள்ளையும், அவருடைய குடும்பத்தினரும் வசித்தார்கள். அந்த கோட்டை கட்டி வசித்த பிள்ளைகளின் பெயர்தான் கோட்டைப் பிள்ளைகள். கோட்டைப்பிள்ளைமார் கோட்டைக்குள்ளேயே பிறந்து கோட்டைக்குள்ளேயே வளர்ந்து பெண்கள் இறந்தால்கூட வெளியே வரமுடியாது. இந்த கோட்டைப்பிள்ளைகள் எப்படி உண்டானார்கள் என்று பார்த்தால் அவர் சொல்கிறார்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் இந்த தாமிரபரணி ஆற்றைத் திசை திருப்பி மாற்றம் செய்த பொன்னையாப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த உரிமைன்னு சொல்கிறார். இதனுடைய காரணமாக பக்கத்தில் பொன்னங்குறிச்சி ஊர் இருக்கிறது. நமக்கு என்ன தேவை இருக்குன்னா, தமிழர்கள் தங்களுடைய ஊர்ப் பெயரையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு. இந்த பொன்னங்குறிச்சி ஊருக்குள் இருக்கக்கூடிய பொன்னன் யாரு? அந்தப் பொன்னனுக்கு, இந்த ஊரினுடைய பெயர் எப்படி வந்தது? இது ஆதிச்சநல்லூருக்குப் பொருந்துதான்னு பார்த்தா, ஆதிச்சநல்லூர்ல இன்னொரு குறிப்பும் சொல்றாங்க. ஆதிச்சநல்லூர் ஒரு காலத்தில், ஒரு சமணத் திருவுருவத்துடன் இருந்திருக்கிறது. இந்தப் புதைமேடை ஒட்டியே இருந்ததாகவும், இந்தப் புதைமேடையை ஒட்டி இருந்த, சமண தீர்த்தங்கரரை பின்னர் வந்த யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என்று சொல்கின்றனர். எனக்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் சொல்றாங்க. நான் நாகப்பட்டினத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சிலையைப் பார்ப்பதற்காக போதிமங்கலம் என்ற ஊருக்குப் போனேன். முதலில் இந்த ஊரில் போய் கேட்டோம். இங்கே இளவரசர் சிலை இருக்கு.




__________________
Admin


Guru

Status: Offline
Posts: 14716
Date: Apr 6, 2015


Permalink

போய் பாருங்கன்னாங்க. இளவரசர் சிலையை நாங்கள் போய் பார்த்தால்,அது புத்தருடைய சிலை. அவங்க சொல்றாங்க, இது வானத்திலிருந்து பறந்துவந்து ஓர் இளவரசன் எங்க ஊரில் விட்டுட்டான். இந்த இளவரசனை நாங்க பாதுகாத்து வச்சிருக்கோம் என்றார்கள். நாங்க சொன்னோம், இது புத்தருடைய சிலை. உங்க ஊர்ல புத்த மடாலயமும் அல்லது ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலமும் இருந்திருக்கும் என்று சொன்னோம். பாதுகாத்து வச்சுருங்க என்றோம். நாங்க இன்னும் பாதுகாத்து வச்சிருப்போம்னு சொன்னார்கள். ஒரு 5, 6 வருடங்களுக்கு முன்பாக திரும்பப் போனேன். நான் திரும்பிப்போகும்போது அந்த ஊரில் வழிபாட்டுத் தலத்தைத் தவிர, 6 அடி புத்தர் சிலையைக் காணோம்.


கேட்டபோது அந்த ஊர்க்காரர்கள் சொல்றாங்க. பறந்து தானே வந்தாரு,பறந்து போயிட்டாரு என்று. அய்யா! உங்களுடைய பகுத்தறிவு கொண்டு நீங்கள் யோசிக்க வேண்டாமா? பெரிய சிலை எப்படிப் பறந்து வரும்! பறந்து வந்தது, பறந்து போயிடுச்சுய்யா! ஏன்னா, நாங்க சொல்றோம்ல, இதுதான் வானத்திலிருந்து வந்த இளவரசர்னு, அவர் பறந்து போயிட்டார். ஆக, இப்படி நம்ம கண்ணு முன்னாடியே பவுத்த மிச்சங்கள் எல்லாமே, அழிஞ்சி போயிட்டு இருக்கிறதைப் பார்க்கிறேன். இங்கேயும் இதே மாதிரி பவுத்தம்போல், மிச்சம் இருந்துட்டு இருக்கு ஆதிச்சநல்லூர்ல. அது காணாமல் போயிருச்சுங்கறாங்க, இந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் விரிவான ஆய்வை, சத்தியமூர்த்தி அய்யா அகழ்வாராய்வுத் துறையில் போய் ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கொண்டு நிறைய முதுமக்கள் தாழிகளை எடுத்து, கிடைத்த, பாசிமணிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் நமக்கு இருக்கும் கேள்வி என்னன்னா,ஏன் இந்த ஆய்வை, ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள்.

பொதுவாக ஓர் ஆய்வு, வெளியாகி ஓர் ஆண்டுகளிலேயே, இல்லை ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஆய்வின் முடிவுகள் புல்லட்டின் என்று சொல்லக்கூடிய வெளியீடாக வெளியாகும். தமிழில் வெளியாகாவிட்டாலும், நாங்க மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஆங்கிலத்தில்தான் வெளியிடலாம்னு, 2004ஆம் ஆண்டிலிருந்து இவ்வளவு ஆண்டுகாலமாகவா இந்த அறிக்கையை வெளியிட மாட்டேங்கிறாங்க என்றால் இந்த ஆய்வறிக்கையின் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. நண்பர்களே, இது வெளியானால் சிந்துசமவெளி, ஹரப்பா,மொகஞ்சதாரோவைவிட பழமையானது, ஒருவேளை, ஆதிச்சநல்லூர் தமிழனுடைய தொன்மையான நாகரிகத்திற்கான சான்றாகும். அதை வெளியிடாமலே வைத்திருக்கிறார்கள். இன்னொன்று இந்த நிலப்பரப்பில்114 ஏக்கரில் ஆய்வு செய்யப்பட்டது. பார்த்தீங்கன்னா, ஒரு 10 அடி, 100அடிக்குள்ளதான் ஆய்வு செய்திருக்கிறார்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் சிந்துசமவெளியை ஆய்வு செய்வதற்குக் கொடுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், சிந்து,ஹரப்பாவையும் சரி, இதற்கப்புறம் போஸ்ட் ஹரப்பான்னு சொல்லக்கூடிய லோத்தல் மாதிரி, குஜராத்தைச் சார்ந்த இடங்களும் சரி, ஆய்வு செய்றாங்க. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நாகரிகம் இருக்கிறது. இந்த இடம் சிந்து சமவெளியைவிட புராதனமானது. இரண்டு உதாரணங்களை தொ.பரமசிவம் சொல்கிறார்.

ஒன்று, இரும்பை உருக்குகிற எஃகு தொழில்நுட்பம், சிந்துசமவெளியில் இருந்திருக்கு. அப்படி இரும்பை உருக்குகிறபோது, என்ன பதத்தில் உருக்க வேண்டும்? எவ்வளவு உஷ்ணம் வேணும்? உருக்குகிறபோது இரும்பை,உருக்குகிற இரும்பை, எப்படி ஒரு கருவியாக செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சிந்துசமவெளியினுடைய எங்கேயிருந்தும் இரும்பைக் கண்டுபிடித்தாலும்,ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சிந்துசமவெளிக்கு வெளியில் எங்கே இருக்கிறது என நான் தேடிப் பார்க்கிறேன். சிந்துசமவெளிக்கு வெளியே இருக்கக்கூடிய கங்கைப் பகுதியில் இல்லை, இந்தப் பக்கம் வந்தால், மத்திய இந்தியாவில் இல்லை,வட இந்தியாவில் இல்லை, தென்னிந்தியாவிலும் வேறு மாகாணங்களிலும் இல்லை. சிந்துசமவெளியைப் போலவே, அதே இரும்பை உருக்குகிற தொழில்நுட்பத்தை, அதேபோல, ஸிணீவீஷீ எனச் சொல்லக்கூடிய, கலப்பு முறை தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் மட்டும்தான் இருக்கிறது எனச் சொல்றாரு. அப்ப என்ன இருக்கிறதென்றால், சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே அளவுமுறைகள் ஆதிச்சநல்லூரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், தமிழன் இங்கிருந்து சிந்து சமவெளிக்குச் சென்றிருக்கிறானா அல்லது சிந்துசமவெளி தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததா? என்ன நடந்தது? இப்போ அந்த செங்கற்களையெல்லாம் அளவிடுகிறார்கள். சுட்ட செங்கற்களை, சிந்து சமவெளியில் கிடைத்த அதனுடைய அளவை எடுத்து, பருமனும், நீளமும் ஒரே அளவாக இருக்கிறது எனச் சொல்றாங்க. எங்கே கல்லை எடுத்தாலும் சிந்துசமவெளி, ஒரே மாதிரியான, சுடு செங்கல் உருவாக்கப்பட்டிருக்கு. அதே செங்கல் அதே அளவுகளில், ஆதிச்சநல்லூர்ல கிடைக்கிறது, அப்போ ஆதிச்சநல்லூர் என்பது சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையான,இன்னும் சொல்லப்போனால் அதைவிட மூத்த ஒரு நாகரிகம். அந்த நாகரிகத்தை, அந்த நாகரிகத்தினுடைய முடிவுகளை நாம் பார்க்கிறோம். நான் ஏன் தெரிஞ்சுக்கலை? இன்றைக்கு நாம் திரும்பத்திரும்ப என்ன சொல்றோம், நாம நம்ம பண்பாட்டு வேர்களை இழந்துட்டோம். நம்ம உடையை மாத்திட்டோம்.




__________________
Admin


Guru

Status: Offline
Posts: 14716
Date: Apr 6, 2015


Permalink

எல்லாவற்றையும்விட அடிப்படையையே கைவிட்டு விட்டோமே?அடிப்படையாக தமிழர்கள், தமிழர்களுடைய உரிமைக்காக நிலைபெறவும்,அடையாளப்படுத்தவும் வேண்டிய விசயத்தையே கைவிட்டு விட்டோம்,இதெல்லாம் மேலான விஷயங்கள். அடிப்படையான விஷயங்களைக் கைக்கொள்ளவும், மீட்டெடுக்கவும், இன்னும் சொல்லப்போனால், இன்று இருக்கக்கூடிய ஊடகத்தளத்திற்குக் கொண்டு வரும்போதுதான் தெரியும். நாம் யாரு? நம்முடைய பூர்வீகம் எது? நம்முடைய அடையாளங்கள் எது?பண்பாட்டுத்தளத்தில் எப்படி இருக்கு? வரலாற்றுத் தளத்தில் எப்படி இருக்கு? கொஞ்சம் கொஞ்சமாக பகுத்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவான். என்னுடைய மொத்தத் தேடுதலின் ஒரு பகுதியாக,இன்னொன்றையும் தேடினேன். நூலாக எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டு, பூம்புகாரிலிருந்து தொடங்கி வஞ்சி வரைக்கும் இருக்கக்கூடிய கண்ணகி, கடந்து சென்ற பாதையை, 7ஆண்டுகளும் மீளாய்வு செய்திருக்கிறேன். பூம்புகாரிலிருந்து எப்படியெல்லாம் கண்ணகி போயிருப்பாள்? எந்த வழியாகச் சென்றாள்?நிஜமா, பொய்யா என்ன நடந்தது? சங்க காலத்தில் நிலங்கள், சங்க காலத்தின் நிழற்படங்கள் எல்லாம் இருக்கிறதா? இல்லைன்னா சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், அதில் குறிப்பிட்டதெல்லாம் நிஜந்தானா? ஓர் உண்மையை அதிலிருந்து சொல்ல விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வழிகளில் ஒரு 70, 80 சதவீத வழிகளில், அப்படியே இன்றைய தமிழகத்தில் இருக்கிறது. வழிகளெல்லாம் மாறவேயில்லை. பேர் மாறியிருக்கு. பஸ் போக்குவரத்து மாறியிருக்கு. ஆனால் அதே போக்குவரத்து சாலைகள்,போக்குவரத்து சாலையில் இருந்த ஊர்கள். அங்கே தென்பட்ட மலைகள். அந்த மலையைக் கடந்து வரக்கூடிய பயம். அங்கிருந்த தெய்வம் உட்பட எல்லாம் இருக்கிறது. அப்ப தமிழ் நிலம் மூடப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க்கை ஒரு புகையால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் இழந்து வேறு அடையாளங்களைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகையை விளக்கினால், இந்தத் தூசிகளை அப்புறப்படுத்தினால், இந்த அழுக்குகளை நீக்கி தண்ணீரைச் சுத்தம் செய்தால், அடியில் மாறாத-_ இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தொன்மை வடிவங்கள் அப்படியே இருக்கிறது. இதைக் கண்டுபிடித்து மீளாய்வு செய்து, எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, ஆய்வாளர்களுடைய பொறுப்பல்ல, நம் அனைவருடைய பொறுப்பு. நாம் அனைவருமே, நம்முடைய பண்பாட்டு வேர்களை ஆராயவேண்டிய கடமையில் இருக்கிறோம். உங்கள் வீதிக்கு ஏன் பெயர் வந்தது? உங்கள் அப்பாவுக்கு ஏன் பெயர் வந்தது? உங்களுடைய சமய, சடங்குகளை எப்படி அறிமுகப்படுத்தியது? ஏன் இந்த சடங்குகள் _செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போது, நாம் புனிதமாகக் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சடங்காகச் செய்யும்போது,பலியாக கருதுகிறோம். இதற்குப் பின்னாடி, அன்றாடத் தமிழனின் வாழ்க்கையை ஒருவன் ஆராயாமல் அவனால் தமிழ் அடையாளங்களைக் கைக்கொள்ள முடியாது. இன்றைக்கு நடந்தது. நாம் கைவிட்டோம்,நம்முடைய பிள்ளைகள் கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இது எல்லாமே தகவல்களாகப் போய்விடும்.
சொல்லப்போனால் நான் பார்த்த ஒடிசா ஆதிவாசிகளைப்போல,அவர்களுக்குத் தமிழ் என்பது புராதன அடையாளமாக இருக்கிறதே தவிர,இன்றைக்கு ஒன்றுமே இல்லை. கேட்டேன். அவன் விறகைச் சுமந்து கொண்டு வந்தான். தோளில் அந்த விறகைச் சுமந்து கொண்டு வரக்கூடிய முறையினுடைய பெயர் என்ன என்று? அவன் சொல்கிறான். காவடி என்று,காவடி என்ற சொல் அவனிடம் இருக்கிறது. ஆனால் காவடி என்றால் தமிழ்ச் சொல் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு தமிழ்ச்சொல். தமிழ்ச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான் தெரியாது. இந்த நிலைக்குத் தமிழர்களே போய்விடுவோம்! இது எங்கோ இருக்கக்கூடிய பழங்குடியினர் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு இப்படி ஓர் அச்சுறுத்தலை நாமே கொடுக்கிறோம். ஓர் எழுத்தாளனாக என்னுடைய பெரிய வருத்தமே என்னன்னா நம்முடைய வீட்டிலிருந்து தமிழ் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது நம்முடைய அழிவினுடைய முதல் புள்ளி. ஒரு சமூகத்திலிருந்து வெளியேறும்போதாவது, சமூகக் காரணிகளை, பின்னாடி இருக்கக்கூடிய பதவி ஆசையை, பொருள் தேடும் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பம் ஒரு மொழியை அதுவும் தமிழ் மக்கள், இத்தனை ஆண்டுகாலமாக தமிழைக் கற்றுக் கொண்டு, தேர்ந்த குடும்பம் ஏன் கைவிடுகிறது? ஒரு காரணமும் இல்லாமல் கைவிடுகிறோம், சீனர்கள் எங்கே போனாலும் சீன நகரத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சீனப் பண்பாட்டை உருவாக்கி விடுகிறார்கள்.

சீன மொழியை உருவாக்கி விடுகிறார்கள். நான் முந்தா நாள் மலேசியாவில் போய், கருத்தைச் சொல்லும்போது, ஓர் இளைஞர் ஆவேசமாக என்னிடம் சொன்னார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழர்கள் இருக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு கிடையாது. ஒருவேளை நாடு கிடைத்தால் நாம் அந்த உரிமையைப் பெறுவோம் என்று சொல்கிறார். என்ன சொல்கிறீர் நண்பரே விரிவாகச் சொல்லுங்கள் என்றேன். அப்போ அவர் சொல்கிறார்,நாங்கள் இன்னொரு தேசத்தில் வசிக்கிறோம், எங்கள் நாட்டில் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், எங்கள் நாட்டோடுதான் ஒப்பந்தம் போட வேண்டும். நாங்கள் தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டால் அரசு சொல்கிறது மாநிலத்தோடு ஏன் ஒப்பந்தம் போட வேண்டும். ஒரு நாட்டோடுதானே ஒப்பந்தம் போட வேண்டும்? என்று.

இவ்வளவு கோடி பேர் தமிழர்கள் வசிக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே என்று ஆதங்கப்பட்டார். இந்த ஆதங்கம், நண்பர்களே, இதுவும் ஓர் அரசியல்தான். இந்த அரசியலையும் நாம் மேலோட்டமாகப் பார்த்து யாரோ ஒருவர் கூட்டத்தில் ஆதங்கப்படுறாரேன்னு போயிட முடியாது. ஆழமாக சமகால உண்மைகளை, சமகால வலியை நாம் புரிந்து கொள்ளத் தொடங்கினால், நாம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருவோம்.

எழுத்தாளனான என்னுடைய தேடுதல் என்பது தமிழ் வாழ்வினுடைய,தமிழின் பெருமையினுடைய இன்னும் சொல்லப்போனால் தமிழ் விட்டுப்போன விஷயங்களை மீளாய்வு செய்வதும், கண்டுபிடிப்பதும் அதைப் பகிர்ந்து கொள்வதும்தான்.
aathijanallur.jpg



- எஸ்.ராமகிருஷ்ணன்

தொகுப்பு : க.செல்வக்குமார், அ.பிரபாகரன்.
http://tamilveangai.blogspot.in/2013/05/blog-post_8969.html

தென்இந்திய குகைக் கல்வெட்டுக்கள்

தமிழ் எழுத்தின் வரிவடிவம் சிந்துவெளியின் சித்திர வரி வடிவத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்; பின்பு தொடர்ந்து வந்த வரிவடிவங்களின் பரிணாம வளர்ச்சியே இன்று காணப்படும் வரிவடிவமாகும். இதனை மறுப்பவர்களும் உண்டு. சிந்துவெளி நாகரீக காலத்தே பதிக்கப்பெற்ற சித்திரவடிவங்களும் இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப் பெற்ற கடலூர், சானூர், கொடுமணல் மற்றும் ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்கள் தமிழ் வரிவடிவம் எப்படியாக வளர்ச்சி பெற்றன என்பதற்குச் சான்றாக அமைகின்றன.



இதனைவிட திருநாதன் குன்றத்து கல்வெட்டின் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட எழுத்துக்கள் உண்மையான தமிழ் வரிவடிவத்தினைப் பிரதிபலித்தது . பிரம்மகிரி அகழ்வாராச்சிகளானது பெருங்கற்காலத்து மக்கள் கி.மு 5ம் நூற்றாண்டளவில் தென் நாட்டில் வாழ்ந்தாகவும் அவர்கள் திராவிடரகள் எனவும்;, அப்பண்பாட்டின் பண்புகளை சங்க இலக்கியத்தில் காணக்கூடியதாக உள்ளதாக குருராஜராவ் அவர்கள் குறிப்பிடுகின்றார்.



தெ.பொ.மீனாட்ச்சிசுந்தரனாரின் கருத்துப்படி தமிழகத்தில் பெறப்பட்ட கல்வெட்டுக்களின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என்பதாகும். இவை தென் பிராமியில் எழுதப்பட்டிருப்பதாகவும் இதே வகையான தென் பிராமி எழுத்து வகையான எழுத்துக்களே இலங்கையில் கண்டுபிடிக்கப் பெற்ற குகைக் கல்வெட்டுக்களாகும்.



இந்திய வரலாற்று நூலை எழுதிய சத்தியநாதையர் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு எழுதும் பழக்கம் கி.மு 2ம் நூற்றாண்டளவில் தொடக்கம் பெற்றாகவே குறிப்பிடுவர். History of India Vol. 1 – P-209. தமிழகத்திலே சமஸ்கிருதத்தில் கல்வெட்டெழுதப் பெற்றது பல்லவ அரசன் வி;ட்டுணுவர்த்தனன் காலமான கி.பி 6ம் நூற்றாண்டிலிருந்து என்கிறார் ஐராவதம் மகாதேவன். – Early History Epigraphy from the times to the Sixth Century AD P-114

தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சி
தமிழ் அரிச்சுவடி பற்றி கி.மு 3ம் நூற்றாண்டின் எழுதப்பெற்ற தொல்காப்பியம் பின் வருமாறு கூறுகின்றது.
எழுத் தெனப் படுப
அகர முதல
னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே
என அ முதல் ன வரையான தமிழ் உயிரெழுத்து பன்னிரண்டுடன் மெய்யெழுத்துமாக முப்பது என இங்கு காட்டுகின்றார். அத்தோடு குற்றியலிகரம், குற்றியலுகரம் அத்துடன் முப்புள்ளியுடைய ஆய்த எழுத்தெனவும் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியர் ஒரு கருத்தினைச் சொல்ல விளையும்போது அதனை தனக்கு முந்திய புலவர்கள் சொல்வார்கள் என்றும் அதனை என்மனார் புலவர் என்று பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். அப்படியாயின் கி.மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பு பல காலத்திற்கு முன்பே தமிழில் தொல்காப்பியத்திற்கு முந்திய ஒரு இலக்கணம் இருந்திருக்க வேண்டும் அல்லது இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு செழித்து வளர்ந்த மொழிக்கோ அன்றி செழித்த இலக்கியங்கள் உள்ள மொழிக்கோ மட்டுமே இலக்கணத்தினைப் படைக்க முடியும். ஆகவே கி.மு 500 ஆணடிற்கு முன்பும்; தமிழ் மிகச் சொழிப்புற்று இருந்த ஒரு மொழியாகவே இருநதுள்ளது என கொள்ளமுடியும். அதுவே தமிழ்ப் பிராமி எனப்படும் தமிழி என்பதாகும்.

சித்திர முத்திரைகளின் வரிவடிவம்
சித்திர முத்திரைகளினால் எழுத்துக்கள் எழுதும்போது சில தனியாகவும் சில ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட முத்திரைகள் சேர்ந்தோ ஒரு எழுத்தை அமைப்பதாக கொள்ள முடியும். அதேபோலவே தமிழ் வரிவடிவம் தனிக் கோடுகளாலும், தனி வட்டங்களாலும், பல கோடுகளாலும், பல வட்டங்களாலும் எழுதப்படும் எழுத்துக்களாகும் அந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே சிந்துவெளி முத்திரைகள் தனியாகவோ அன்றி ஒன்றாகவோ அன்றி ஒன்றிற்கு மேற்பட்டனவாகவோ சேர்ந்து வரிவடிவங்களை அமைக்கிறதென்று கொள்ள முடியும்.

கி.மு.1500 இன் இறுதியிலிருந்த சித்திரவெழுத்து கி.மு 500 ஆண்டுகளில் தமிழியாக வளர்ச்சி பெற்று தொடர்ந்து கி.பி 200 லிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிபி400 ஆண்டளவில் வட்டெழுத்தாக மாற்றம் பெற்று மேலும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இன்றைய வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் பெற்றது.

சிந்துவெளி சித்திர எழுத்திலிருந்து தற்காலம் வரையான தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சி
சிந்துவெளி சிந்திர வரிவடிவிலிருந்து தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சியும் அசோகன் பிராமிக்கு அது எவ்வாறாக வித்திட்டது என்பதனை கீழே நோக்கவும். மனித உருவத்திலிருந்தே சிந்துவெளித் தமிழன் தனது அகரத்தினைத் தோற்றுவித்தான். அதன் அவையவங்களை வைத்தே அகரத்தின் பரிணாமவளர்ச்சி வளர்ந்துள்ளது.


அசோகன் பிராமி


1. கிமு 6000 – கிமு1500 வரையான சிந்துவெளி அகரத்தின் சித்திர வரிவடிவம்
2. சித்திர வரிவடிவத்தின் தொடர்ச்சியான அகர பரிணாம வளர்ச்சி
3. கிமு.5ம் நூற்றாண்டிற்கு முந்திய அகரத்தின் பரிணாமம்
4. கி.மு.5ம் நூற்றாண்டின் தமிழி
5. அகரத்தின் அடுத்ததான பரிணாமம்;.
6. தற்போதைய அகரத்தினை அண்டிவிட்ட அ
7. தற்போதைய நவீன அகரத்திற்கு முந்திய அகர தோற்றம்
8. கி.பி 4ஆம் நூற்றாண்டிகத் தோன்றம் பெற்ற வட்டெழுத்தான நவீன அகரம்

பிரகிருதத்தில் எழுதப்பெற்ற அசோகன் பிராமியினை அடியொற்றியே தேவநகரியும் அதனை அடியொற்றிப் பிறந்த வடஇந்திய மொழிகளும் பிறந்ததாகக் பல அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள். இம்மொழிகளை இந்தோ-ஆரிய மொழிகள் என்ற பெயரினால் அழைக்கத் தலைப்பட்டனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறு குடிகளாவர். அவர்கள் மத்தியசியாவிலிருந்தும் குறிபாக றஷ்யா, பாரசீகம், கிழக்கு ஐரோப்பா ஆகிய பிரதேசங்களிலிருந்து குடியேறியோராவர். இதன் காரணமாக பல மொழிகளினைப் பேசும் ஒரு கூட்டமாகவே வந்து ஆக்கிரமிப்புச் செய்திருந்தார்கள். ஆகவே இப்பல மொழி பேசுவோர் இந்தியாவில் ஏற்கனவே வாழ்ந்த சுதேசிகளுடன் கலந்தபோது அந்த சுதேசிகள் பாவித்த மொழியினையொட்டிய ஒரு மொழி பாவனையில் இருப்பின் அவர்களுடன் ஒன்றிணைவதற்கு ஒரு பாலமாக அமையும் என்று கருதியதனால் ஒரு பொது மொழி தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். இதனாலேயே அப்போது வடநாட்டில் வாழ்ந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதத்தினைத் தங்கள் மொழித் தோற்றத்திற்குப் பாவித்திருக்கலாம். இக்காலத்தே அசோகன் பிராமியானது சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தோன்றிய தமிழியில் இருந்து தனக்கு வேண்டிய வரிவடிவங்களை அமைத்துள்ளது என்றே கொள்ள வேண்டும். அதற்கான காரணங்களைப் பின்வருவனவற்றினைக் கொண்டு அறிய முடியும்
1. தமிழி வரிவடிவம் தோன்றுவதற்கு சிந்துவெளியின் சித்திரவெழுத்துக்கள் ஆதாரமாகவிருந்தது. இது முழுக்க முழுக்க திராவிட வரிவடிவமென ஐயம்திரிபற ஏற்கப்பட்டுவிட்டது.
2. அசோகன் பிராமியிலிருந்து ஏனைய மொழிகளின் வரிவடிவம் தோன்றியதாயின் அதற்கான மூல வரிவடிவம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது. சிந்துவெளி நாகரிக முத்திரைகளை விட வேறெந்த முத்திரைகளோ அன்றி சித்திர வரிவடிவங்ளோ கிடைக்காதபோது அசோகன் பிராமியின் மூல வரிவடிவ ஆதாரத்தினை நிறுவுவதற்று எந்தச்சான்றுகளும் இல்லை.
3. சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தமிழியும், தமிழியிலிருந்து அசோகன் பிராமியும் தோன்றியதனை மேலே நோக்கினோம்.
4. ஆரியர்கள் இந்திய சுதேசிகளுடன் கலந்தபோது அங்கு திராவிடர்களே ஏற்கனவே அதிஉச்ச நாகரிகத்தில் வாழ்ந்துள்ளார்கள். ஒரு இடத்தினை ஆக்கிரமிப்போர் அங்குள்ள செல்வம், கலை கலாசாரம் போன்றவற்றினை அபகரிக்கவே முயன்றிருப்பர். இதனைச் செய்ய அவர்களுக்கு அங்கு பாவனையில் இருந்த சுதேச மொழியில் அறிவு தேவைப்பட்டது. ஆகவேதான் ஏற்கவே பாவனையில் இருந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தேவநேயப் பாவாணர் அவர்களது கருத்துப் போல் வடதிரவிடர்கள் பாவித்த வடதிராவிடமாகிய பிரகிருதமே அசோகன் பிராமியின் பிறப்பிற்கும் தேவநகரியின் பிறப்பிற்கும் ஆதாரமாயின.
5. மேலேயுள்ள ஆதாரங்களை நோக்கின் சகல வடமொழிகளின் பிறப்பிற்கு திராவிடமே ஆதாரமாகவிருந்தது என்ற உண்மை இங்கு வெளியே தெரிகின்றது.


அசோகன் பிராமியின் அகரம்

மேலே காணப்படுவதே அசோகன் பிராமியின் அகரம். இதன் தோற்றம் கிமு.3ஆம் நூற்றாண்டாகும். தமிழியின் காலம் கிமு.5ஆம் நூற்றாண்டாகும். ஆகவே தமிழ் பிராமியிலிருந்தே தோற்றத்தின் அடிப்படையிலும் காலத்தின் அடிப்படையிலும் வரிவடிவத்தின் அடிப்படையிலும் தமிழியே அசேகன் பிராமிக்கு முந்தியது மட்டுமல்லாது அது தோன்றுவதற்கும் ஆதாரமாய் அமைந்து அதன் பிரதிமையே அசோகன் பிராமியென உறுதியாகக் கூறமுடியும். ஆகவே அதன் வழிவந்த வட மொழிகள் அத்தனையும் தமிழ் பிராமி வழிவந்ததெனறே கொள்ளவேண்டும். தமிழிக்கு அதன் வரிவடிவத்தினை அமைக்க அதன்பின்புலமாக சிந்துவெளியின் சித்திர எழுத்துக்கள் இருந்துள்ளன. சிந்துவெளி வரிவடிவங்களும் அக்காலத்தே பாவிக்கப்பட்ட மொழி திராவிடம் என்பதும் ஐயம்திரிபற சகல ஆராச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அசோன் பிராமி எங்கிருந்து தனது மூலவரிவடிவத்தினைப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கம் என்ன? சிந்துவெளி நாகரிகத்தினை விட வேறு எங்கிருந்தும் வரிவடிவங்களினை அசோகன்பிராமி பெற்றுக் கொள்ளுவதற்கு வேறு ஏதும் வரிவடிவங்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்ததா என்று நோக்கின் அதற்குரிய விடை அப்படியேதும் இருந்ததில்லையென்பதாகும். ஆகவே இதனையொற்றிப் பிறந்த பிரகிருதமும் அதிலிலிருந்து பிறந்த ஆரிய மொழிகளினதும்; மற்றும் வடஇந்திய மொழிகளின் வரிவடிவத்திற்கும் திராவிடமே மொழிவரிவடித்தினைக் கொடுத்தததென்றே கூறமுடியும்.

அகரவரிசைகளின் ஒப்பீடு
கீழே காணப்படும் அட்டமவணையில் தமிழ் அகர வரிசையில் உள்ள அ வும் ஆ என்ற வரிவடிவத்தினைப் போன்ற சாயலுடனேயே சமஸ்கிருத அ, ஆ ஆகிய இரண்டு எழுத்துக்களும் அமைந்தன. அ விற்கு மேலே சுழியிட்டு பின்பு அதற்குக் கீழே ஒரு வண்டியிட்டு பிற்பகுதியில் ஒரு கோட்டினை இட்டு முடிப்பதே தமிழ் அகரமாகும். இதே எழுத்து முறையினைப் பின்பற்றியே கீழே குறிப்பிட்ட கால வரிசைப்படி தோன்றிய பல இந்திய மொழிகளின் எழுத்து வரிவடிவங்கள் தோற்றம் பெற்றன., திராவிட மொழிகளிலோ அன்றி; ஆரிய மொழிகளிலோ அந்ததந்த மொழிகளின் வரிவடிவங்கள் தமிழ் வரிவடிவத்தின் சாயலை அடியொற்றியே அமைக்கப் பெற்றன.. தெலுங்கும் கன்னடமும் தமிழ் அ வரிவடிவத்தை தலை கீழாக போட்டு எழுதியிருப்பதனை அவதானிக்க முடியும்;. அதிலும் ஒரு வட்டம், ஒரு வண்டி மற்றும் ஒரு கோட்டுடனேயே அகரம் அமைக்கப்பட்டுள்ளது. கீழே காணப்படும் பட்டியலின் வரிவடிவங்களை நோக்கின் உயிர் எழுத்துக்களின்; தொடர்பு பற்றி ஒரு முடிவிற்கு வர முடியும்.
கீழே காணப்படும் அட்டவணையில் மொழிகளின் அகரவரிசை வரிவடிவங்களும் அவை தோன்றிய காலவரிசையின் அடிப்படையிலும் எழுத்து வரிவடிவங்களின் ஒப்பீட்டடிப்படையிலும் தரப்பட்டுள்ளன. இவ்வட்டவணையிலிருந்து சிந்து சித்தரவெழுத்திலிருந்து தமிழியும் தமிழியிலிருந்து தற்கால தமிழ் அகரவரிசையும் தமிழியைப் பின்பற்றி ஏனைய எழுத்துக்களின் வரிவடிவங்களும் எவ்வாறாகத் தோன்றியதென்பதை ஐயம்தெளிவுற அறிந்துகொள்ள முடிகின்றது. அகரவரிசையின் ஏனைய எழுத்துகளாக இ, ஈ, உ, ஊ, எ, ஏ, உ, ஊ, ஐ, ஒ ஆகிய எழுத்துக்ளை பட்டியலில் காட்டப்பட்ட ஏனைய எழுத்துக்களுடன் நோக்கின் தமிழ் எழுத்துக்களுக்கும் மற்ற மொழிகளின் அதே எழுத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ள முடியும்.
சிந்துவின் சித்திரவரிவடிவம் - தமிழி – அசோகன் பிராமி – ஏனைய மொழிவடிவங்களின் ஒப்பீடு




தமிழின் தொன்மையும் அதன் நீண்ட வரலாறும், சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளும்; தென்னாட்டில் கிடைக்கப்பெற்ற குகைக் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட மட்பாணடங்களில் காணப்படும்; வரிவடிவங்களும், தொல்காப்பியத்தின் தொன்மையான வரலாறும் ஏனைய மொழிவரிவடிவங்களில் எவ்வாறான தாக்கத்தினையும்; செல்வாக்கினையும் செலுத்தியது என்பதனை அறிய முடியும்.
• மேலேயுள்ள அட்டவனையில் காணப்படும் தமிழின் எழுத்துக்கள் கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக வட்டெழுத்தாக மாற்றம் பெறுகின்றன.
• வடமொழி தமிழியின்; வடிவத்தினின்றும் தனது சொந்த வரிவடிவத்திலிருந்து மாற்றம் பெற்று வட்டெழுத்தாக கிரந்தம் என்ற பெயருடன் கிபி500 ஆண்டளவில் தென்நாடடிற்கு அறிமுகமாயிற்று. இக்காலத்தேதான் பல்லவப் பேரரசர்கள் ஆரியச் செலவாக்கினைத் தென்நாட்டில் வேரூன்றச் செய்யும் நோக்கோடு தமிழோடு இணைந்த ஒரு வரிவடிவத்தினை கிரந்தமாகத் தோற்றுவித்து தென்நாட்டில் புகுத்தினார்கள். முதன் முதலில் கிரந்தமே தமிழ் வரிவடிவத்தினையொற்றிப் பிறந்த மொழியாகும். தேவநகரி எழுத்துகள் நேர் கோட்டு வரிகளைக் கொண்ட எழுத்து வடிவத்தால் அமைந்தது. ஆனால் அதன் அ மற்றும் ஆவன்னாவிலும் தமிழ் அ, ஆ வன்னாவின் வட்டெழுத்துச் சாயல் காணப்படுகின்றது அதனை ஆரியர்களால் மறைக்க முடியவில்லை..
• சிந்துவெளியில் வாழ்ந்த திரவிடர்களே இந்தியாவின் ஆதிக் குடிகளாகளாவும் சிறப்புடன் கட்டிடக்கலை, சிற்பக்கலை, உலோக பயன்பாட்டுக்கலை, நகர நிர்மாணம், மண்பாண்ட பாவனையில் தங்கள் மொழியினைப் பதிவு செய்யும் கலை போன்றவற்றை அங்கு வாழ்ந்தவர்களே இந்திய நாட்டிற்கு அறிமுகம் செய்தார்கள்;. அவர்கள் எழுதி வைத்த சித்திர எழுத்து வடிவங்களே இந்தியாவின் முதல் எழுத்து வடிவங்களாகும்;. இதற்கு முன்பு இந்தியாவில் எந்தவிதமான சித்திரவரிவடிவங்களோ அல்லது எழுத்து வடிவங்களோ இருந்ததேயில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவுமேயில்லை. இந்த சித்திர வடிவங்களே முதலில் இந்திய துணைக்கண்ட மனிதன் பேசும் மொழியின் கருத்தினை எழுத்தில் வடிக்க படைக்கப்பெற்ற வரிவடிவமாகும். இதிலிருந்து பிறந்த தமிழிலில் இருந்தே ஏனைய மொழிகளும் அடியொற்றி பின்பற்றியிருக்க முடியுமேயல்லாமல் வேறு எக்காரணிகளும்; அந்தந்த மொழிகளின் வரிவடிவம் தோன்றக் காரணமாவிருக்க முடியுhது.
• தமிழில் முதல் தோன்றிய இலக்கண நூல், தொல்காப்பியமாகும். இதன் காலம் கிமு 300 என்று பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழில் தொல்காப்பியம் எழுதப்பட முன்னர் ஒரு சில இலக்கிய வடிவங்கள் இருந்திருக்க வேண்டும் என சிந்திக்கும் எவருக்கும் உதிக்கும் ஒரு உண்மையாகும்;. காரணம் அதில் படைக்கப் பெற்ற எழுத்ததிகாரம்;, சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பனவற்றிக்கான இலக்கணவடிவம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ஒரு இலக்கிய வடிவத்திற்கோ அன்றி ஒரு திருந்திய மொழிக்கோ எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லாது விட்டால் வெறும் வெறுமையிலிருந்து ஒரு மொழியின் இலக்கணத்தைப் படைக்க முடியாது. ஆகவே தமிழ் எழுத்து வரிவடிவம் கி.மு விற்கு முற்பட்ட கி.மு 500 ஆகக் கருதப்பட முடியும்.
• திராவிட மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்களுக்கோ அன்றி சிங்களத்திற்கோ எந்தவொரு தெலுங்கு பிராமியோ அன்றி கன்னட பிராமியோ அல்லது சிங்கள பிராமியோ இதுவரை ஆந்திராவிலோ அல்லது கன்னடத்திலோ அல்லது இலங்கையிலோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே அதற்கான வரிவடிவம் நேரடியாகத் தமிழில் இருந்தும் அம்மொழிகளின் சில அம்சங்கள் பிரகிருதத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு வரிவடிவங்களுக்கும்; மேலே அட்டவணையிலுள்ள ஏனைய திராவிட மற்றும் ஆரிய மொழிகளெனக் கூறப்படும் மொழிகளுக்கும் வரிவடிவத்தில் வேறுபாடுகள் தெரிந்தாலும் அ எழுத்தையும் ஆ வன்னா எழுத்தையும் தொடர்ந்து ஏனைய எழுத்துக்களையும் நோக்கும் போது சகல மொழிகளின் அ, ஆ எழுத்து இரண்டும் தமிழுக்கேயுரியதான ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது.
• ஆரிய மொழிகள் என்று கூறப்படுகின்ற ஒரியா, சிங்களம், குஜராத்தி ஆகிய மொழிகளுக்கும் அ, ஆ அகிய இரண்டு எழுத்துக்கள் ; தமிழுக்கென விசேடமாக அமைந்த ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. ஏனைய உயிர் மெய் எழுத்துக்கும் தமிழ் வரிவடிவத்தினையொற்றியே எழுதுப்பட்டு இருப்பதனைக் காணமுடியும். இந்த மொழிகள் ஆரிய மாயைக்கு உட்பட்டே ஆரிய மொழிகளாக தங்களை ஆக்கிக் கொண்டன. அதனை தங்கள் மேன்மையென்றும் கருதிக் கொண்டனர். அண்மைய ஆராச்சிகள் ஒரிய மொழியும் திராவிடம் என்ற முடிவிற்கு ஒரு சில அறிஞாகள் வந்துள்ளனர்.
• சேர் கியேசன் என்னும் அறிஞர் கூறும் போது தமிழ் மிகவும் அனாதியானது மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழியாகும். தமிழ் ஆரம்ப காலத்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மொழியாகவேயிருந்தது. பின்பு கி.பி 10ம் நூற்றாண்டில் தெலுங்கும், கிபி. 850ஆம் ஆண்டுகளில் கன்னடமும், கி.பி. 1400ல் மலையாளமும் தனித் தனி மொழிகளாயின. ஆதாரம்: Concise History of Ceylon. P40
• கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒரு மொழியே இருந்துள்ளது. அதுபற்றி இன்னொரிடத்தில் கிரியேசன் குறிப்பிடும்போது இலங்கையில் தமிழோ அன்றி அதனையொட்டிய ஒரு மொழியோ வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தேயிருந்திருக்க வேண்டும். ஆதாரம் Concise History of Ceylon. P42 பௌத்த சமயம் இலங்கையில் பரவியதனைத் தொடர்ந்தும் விஜயனின் வருகையோடும் அதனைத் தொடர்ந்துமே ஆரியச் செல்வாக்கு இலங்கையில் பரவியது.
முடிவுரை
மேலே கூறப்பட்ட தமிழின் வரலாறும் அதன் தொன்மையும் அதன் மொழிச் செழிப்பும் சிந்துவெளியிலிருந்து வளர்ந்த மொழிவரிவடிவ பரிணாம வளர்ச்சியும் ஆரிய ஆக்கிரமிப்பின் போதுகூட தனது தனித்தன்மையுடன் வளர்ந்து அதன் வரிவடிவத்தனை ஏனைய மொழிகளுக்கும் கொடுத்து அந்தந்த மொழிகளும் வளர வழிசமைத்ததென்றே கூறமுடியம்.
உசாத்துணை நூல்கள்:
1 கு. அரசநாதனின் தமிழ்க்கப்பல் நூலில் என்ற நூலின் முகவுரையில் பி.இராமநாதன்,)
2. விக்கிப்பீடியா தேடுதளம் -
3. கு.அரசேந்திரனின் தமிழ்க்கப்பல்.
4. மொழி வரலாறு தெ.பொ.மீ களஞ்சியம் 1
5. Concise History of Ceylon 19616. என் மொழியின் கதை – ச.வீ.துருவசங்கரி canada

http://tamilennam.blogspot.in/2010/07/blog-post_31.html

Saturday 14 November 2015

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?

ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது.

ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)


திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்:

முந்திய காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள். இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது.

ஜப்பானிய-தமிழ் மொழியைப்பற்றி ஆராய்ந்த ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் ஓசை களஞ்சியத்திலிருந்து அவர் வரலாறு (18.01.2009)

தமிழ் - ஜப்பானிய மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ:

டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் ஜப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அகராதியின் படிகள் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.

"ஜப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.

ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.


1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).

தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - ஜப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "ஜப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் ஜப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும் 1980 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-ஜப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன் விளைவாகத் தமிழ்- ஜப்பானிய மொழி உறவு பற்றி ஜப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.

ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை ஜப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்- ஜப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு ஜப்பான் திரும்பினார்.

தமிழ் ஜப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் ஜப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல் ஜப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது. ஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் ஜப்பான் என்.எச்.கே நிறுவனம் ஜப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.

தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் ஜப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே ஜப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் ஜப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து.எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.


12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் ஜப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.

ஓனோ அவர்கள் தமிழ் ஜப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்."தமிழ் ஜப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.

தமிழ்மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க இலக்கியங்கள் போலச் ஜப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது.தமிழ் ஜப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு,சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

(எ.கா)
நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர

எனச் சொல் ஒற்றுமை உள்ளன. சுசுமு ஓனோ அவர்கள் ஜப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள். தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் ஜப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில் ஜப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் ஜப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார். 1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது ஜப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் ஜப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்) எழுதினார்.பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் ஜப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் ஜப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.


தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். ஜப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின. இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது.உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் ஜப்பானிய உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் ஜப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு. 1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் ஜப்பானுக்கு அழைத்துத் தமிழ் ஜப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள் அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும்,மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர். இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் ஜப்பானிய மொழியில் வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் ஜப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் ஜப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.

தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். ஜப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் ஜப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

டிஸ்கி 1 : இதுபற்றி ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை

டிஸ்கி 2 : சொற்கள், இலக்கணம், பொங்கல் திருவிழா, பெண்பார்க்கும் முறை என எல்லாமே இருமொழிகளிலும் ஒன்றாய் இருப்பதை வெறும் தற்செயல் என ஒதுக்கிவிட முடியாது. நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதில் நகைச்சுவை என்னவென்றால் இதுவரை தமிழ்பற்றி ஆராய்ந்து அதன் பெருமைகளைப் போற்றியவர்கள் வேற்றுமொழிக்காரர்களே! :-)

Thursday 12 November 2015

சங்கத்தமிழரின் உணவுமரபு



31.10.2014-தி.ஆ 2045-அவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்கு டித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொடங்கியுமம் விட்டனர். துடித்துப்போ னா ள் மணப்பெண்ணின் தாய். தனிக்குடித்தனம் எப்படிச் சாத்தியம்? பொறுப்பேதுமின்றி துடுக்குத்தனத்துடன் உலா வித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்?

தாய்மனதால் அமைதி கொள்ள இயலவில்லை. தன் தோழியை அழைத்து வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். மகளின் தனிக்குடித்தனச் ‘சிறப்பைக்’ கண்டு வருமாறும் கேட்டுக்கொண்டாள்.

அதுதான் மணமக்கள் குடியிருக்கும் வீடு. அருகே சென்ற தோழி உள்ளே செல்லாது மறைந்திருந்தே நடப்பதைப் பார்ப்பதென முடிவுசெய்தாள்.

கணவன் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். திரும்பி வரும் கணவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் இளமனைவி.

நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்தாள். எப்போதுமே நன்கு முற்றிய தயிர்தான் உணவுக்குச் சுவை தரும். ஆக்குவதற்;கு முன்பாகத் தயிரைக் கட்டித்தன்மை இல்லாதவாறு பிசைய வேண்டும். தன் மெல்லிய விரல்களால் தயிரைப் பிசைந்தாள். அவ்வேளை அவள் அணிந்திருந்த கலிங்கம் எனப்பட்ட பெறுமதியான சேலை நழுவிவிட்டது. நழுவிய சேலையை அள்ளியெடுத்துச் செருகியாக வேண்டும். தயிர் பிசைந்த கை. சேலையைத் தொட்டால் அது அழுக்காகி விடும். கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டுவிடும்.

அவளுக்குத் தயிரின் பதமே பெரிதாகவிருந்தது. தயிர்க்கறை படியச் சேலையை அள்ளிச் செருகிவிட்டு தன்பணி தொடர்ந்தாள்.

நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும். முறைப்படி தாளிக்கின்றாள். கடும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, தாளிதப் புகை பொங்கி எழுந்தது. முகம் எங்கும் படிந்து கண்களினுள் புகைந்தது. கண்ணைக் கசக்கியபடி தாளிதத்தைத் துழாவிக்கொண்டிருந்தாள். தாளிதச் சட்டியைவிட்டு விலகவேயில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறிவிட வாய்ப்பு உண்டு.

ஒரு வழியாகத் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க்குழம்பை ஆக்கிவிட்டாள்.

கணவன் வீடு வருகின்றான். இன்முகத்தோடு உணவு பரிமாறுகிறாள். ‘இனிமையாக இருக்கிறதே உணவு’ என்றவாறு கணவன் மகிழ்ந்து உண்கிறான். அந்த அழகைக் கண்ணுறுகிறாள். நுண்மையான இன்பக் கோடுகள் அவள் முகமெங்கும் படர்ந்தன.

இது சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்

தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” கு.தொ. 167

சங்ககாலத்துக் குடும்பப் பெண்ணொருத்தி உணவு ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது இப்பாடல்.

சங்ககால மாந்தரது வாழ்வியல் அடையாளங்களில் அவர்கள் கைக்கொண்ட உணவுப் பழக்க வழக்கம் உன்னதமானதொரு இடத்தைப் பெறுகின்றது. உண்ணுதல் என்பது ஓர் உடல் சார்ந்த தேவையாக இல்லாமல் சமூகம் சார்ந்த செயலாகவே சங்ககாலத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தே விருந்தினருக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையும், குடும்பம், ஊர் சார்ந்த நிகழ்வுகளில் உணவு பெற்றிருந்த சிறப்பும் உணவின் சமூகச் சார்பைப் புலப்படுத்துகின்றன.

உண், ஊன், உணவு போன்ற சொற்களின் வேர்ச் சொல் ‘உள்’ என்பதாகும் என்கின்றார் தொ. பரமசிவன். உட்கொள்ளுதல் என்ற செயலிலிருந்து பிறந்ததே இந்த வேர்ச்சொல் ஆகும்.

சங்ககாலத்தவரது வாழ்வை நுனிப்புல்லாக மேய்ந்தோர் சிலர் “அக்காலத்தோரின் உணவு மரபு போற்றுதற்குரியதல்ல” எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறானோரின் கருத்துகளை மறுதலிக்கவும், அக்காலத்தோரின் உணவு மரபினை இக்காலத்தோர் விளங்கிக்கொள்ளவும் வாய்ப்பாக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மனித குலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பர். சங்ககாலத்தோரின் வியத்தகு வளர்ச்சியில் உணவுப் பாரம்பரியத்தின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மனிதனது உணவுத் தேவையானது இருப்பின் தேவையை நிறைவு செய்த போதும் அது இனம் சார்ந்த பண்பாட்டாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. சங்ககால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணவு தொடர்பான செய்திகள் ஒரே களத்தைக் கொண்டவையாகவும், ஓரே காலத்துக்கு உரியனவாகவும் இருக்கவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுப்பப்பட்ட வாழ்களங்கள் தோறும் மாறுபட்ட உணவு மரபுகளை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு களத்திலும் குறிப்பிட்ட பொருட்களே கிடைத்தன அல்லது உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் எல்லாக் களங்களுக்கும் எல்லாம் கிடைக்கவில்லை. தம்மிடம் மேலதிகமான இருப்பதைக் கொடுத்து பிற களத்தாரிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொண்டனர். எனவேதான் பண்டமாற்றும் பகிர்தலும் அக்காலத்தில் ஓங்கியிருந்தன.

சில நூற்றாண்டுகள் இடைவெளியைக் கொண்ட பல வளர்ச்சிப்படிகளினூடாகச் சங்ககாலத்தோரது உணவு மரபினை நாம் நோக்கலாம்.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், குறிப்பேடுகள் கல்வெட்டுகள் என்பன சங்ககால உணவுகள் குறித்துப் போதிய சான்றுகளைத் தருகின்றன.

தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நில அடிப்படையில் ஐந்தாக வகுக்கின்றது. ஐவகை நிலங்களில் வாழ்ந்தோர் தமிழர் என்ற போதிலும் நிலம் சார்ந்த பண்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்பவும், இயற்கை அமைவுகளுக்கிசைவாகவும் உணவுகளும் ஆக்கும் முறைகளும் வேறுபட்டிருந்தன.

தொல்காப்பியம் சுட்டிய ஐவகை நிலங்களுக்குமுரிய உணவும் நீர் வகைகளும் கீழே தரப்படுகின்றன.


➢ முல்லை நிலமக்களுக்கு உணவு- வரகு, சாமை

நீர் – கான்யாறு


➢ குறிஞ்சி நில மக்களுக்கு உணவு – திணை, தேன், மூங்கிலரிசி

நீர் – அருவி நீர், சுனை நீர்


➢ மருதநில மக்களுக்கு உணவு – செந்நெல் – வெண்ணெல்

நீர் – ஆற்றுநீர், மனைக்கிணற்றுநீர், பொய்கை நீர்


➢ நெய்தல் நிலமக்களுக்கு உணவு – உப்புக்கு விலைமாறிய பண்டம், மீனுக்கு விலைமாறிய பண்டம்

நீர் – மணற்கிணறு, உவற்குரிநீர்


➢ பாலை நில மக்களுக்கு உணவு – ஆறலைத்த பொருள், சூறை கொண்ட பொருள்

நீர் – அறுநீர் கூவலும், சுனை நீரும்.


தொல்காப்பியர் மரபியலில் என்னும் பகுதியில்,

“மெய் திரி வகையின் எண்வகை உணவில்” (பொரு 623)

என எட்டுவகை உணவைக் குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதிய நச்சினார்கினியர் நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் இறுங்கு, கோதுமை போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை. ஆயினும் வடமொழி செவ்வியல் இலக்கியங்கள், தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடிவகை என எட்டு வகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக இருக்கலாமோ என்ற ஐயமும் ஆய்வாளரிடத்தே உள்ளது.



தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம்.



இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது.



“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்

பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,

பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்

பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த

இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,

ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, (சிறுபாணாற்றுப்படை 238-245)



இந்த நூல் குறித்த செய்திகள் மணிமேகலையிலும், சீவகசிந்தாமணியிலும் காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனி;த்துவமான ஒரு நூல் எழுதப்பட்டிருக்கின்றது என்ற செய்தியே அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது.



அக்காலத்தே பத்துக்கு மேற்பட்ட சொற்களால் உணவைக் குறித்தனர்.


“உணாவே வல்சி உண்டி ஓதனம்

அசனம் பகதம் இரை ஆசாரம்

உறை, ஊட்டம்”

எனப் பிங்கல நிகண்டு உணவைக் குறிக்கும் பிற சொற்களைத் தருகின்றது. இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.

அடுப்பு – அட்டில் - குழிசி

நெருப்பைக் கண்டறிந்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகே சமையல் முறை சிறப்புற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை. நெருப்பு மூட்டிச் சமைக்கும் அடுப்புகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன.



“முடித்தலை அடுப்பு” (புறம்.28.6)

“ஆண்டலை அணங்கடுப்பு” (மது.காஞ்.29)

“ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு” (புறம்.164)

“முரியடுப்பு” (பெரும்பாணாற்றுப்படை)

“களிபடுக்குழிசி கல் அடுப்பு” (நற்றிணை 41)



இவ்வாறான பல அடுப்புகள் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுப்பு என்ற சொல்லாட்சி அக்காலத்திலிருந்தே வழக்கிலிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுப்புகளை விடவும் வேட்டைக்குச் செல்வோர் தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ணும் வழக்கமும் இருந்திருக்கின்றது.



உணவுமரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை இல்லங்கள் தோறும் தோற்றங் கொண்ட ‘சமையலறை’ எனலாம். அக்காலத்தே வீடுகளில் தனித்துவமான சமையலறைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அட்டில் என அழைத்திருக்கின்றனர்.



“உதியனட்டில் போல ஒலியெழுத்து அருவியார்க்கும்” என அகநானூறும்

“புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்” எனச் சிறுபாணாற்றுப்படையும்

“அறநிலை இய அகனட்டில்” எனப் பட்டினப்பாலையும் சமையலறைகளைக் குறிப்பிடுகின்றன.



அக்காலத்தே சமையற் பாத்திரங்கள் குழிசி என்னும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கின்றன. அவை உட்குழிந்து இருப்பதால் இப்பெயர் தோன்றியிருக்கலாம்.



“இருங்கட் குழிசி” (புறம்.65-2)

“மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி” (புறம்-168-9)

“அட்டகுழிசி அழற்பயந்தாங்கு” (புறம்-23)

“வெண்கோடு தோன்றாக் குழிசி” (புறம்-251)

“முரவு வாய் ஆடுறு குழிசி” (புறம்-371)

“களிபடுக்குழிசி” (நற்றிணை 41)



தண்ணீர் எடு;த்துவரப் பயன்பட்ட பாத்திரம் ஒன்று,



“தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்” - (அகநானூறு 393) என அழைக்கப்பட்டிருக்கின்றது.



இவை தவிர, புகர்வாய்க் குழிசி, சோறடு குழிசி போன்ற பாண்டங்களையும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.



சமையல் வகைகளும் உண்ணும் முறைகளும்



சங்கத்தமிழர் பல்வேறு சமையல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், நெய்யிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் போன்ற சமையல் முறைகளை இலக்கியங்களில் காணலாம்.

உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர். அவையாவன,

• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

• உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.

• உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.

• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.

• நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.

• நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.

• பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.

• மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.

• மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.

• விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.



மிக நுட்பமாக உணவருந்தும் வழிகளை ஆய்ந்து பொருத்தமாகப் பெயரிட்டிருக்கும் சிறப்பு வியக்க வைக்கின்றது.

சங்கத்தமிழர் வாழ்நிலமெங்கும் நூற்றுக்கணக்கான உணவுமுறைகள் காணப்பட்டிருக்கின்றன. நிலம், குலம், தொழில் சார்ந்து அவை வேறுபட்டிருக்கின்றன.

இனி சங்கத் தமிழரது உணவு வகைகளையும் ஆக்கும் முறைகளையும் நோக்குவோம்.

சோறு

அக்காலந்தொட்டே வழக்கிருந்து வரும் சொல் சோறு. அக்காலத்திலேயே சோறுதான் முதன்மை உணவாக் திகழ்திருக்கின்றது. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அரிசியின் பயன்பாட்டை அறிந்திருக்கின்றனர். பழங்காலத் தமிழரது வாழ்வை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் ஆதிச்ச நல்லூர் தொல்பொருட்கள் தமிழரது அரிசிப் பயன்பாட்டைப் புலப்படுத்துகின்றன.

கோதுடன் இருந்தால் நெல், குற்றியெடுத்தால் அரிசி, வேக வைத்தபின் சோறு எனப் பயன்படத்தப்பட்ட சொல் வழக்கங்களே அரிசிப் பயன்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன.

வெண்நெல், செந்நெல் என்ற இருவகை நெல்லும் அக்காலந்தொட்டே வழக்கிலிருந்தன. நெல்லுக்கு வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம் என்ற பெயர்களும் புழக்கத்தில் இருந்துள்ளன.

சோறு என்பதை அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை, பருக்கை, பிசி, அன்னம் என்ற பல சொற்களால் குறித்தனர்.

பச்சரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப்; பொங்கல் என்றும்,

புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது.

ஆக்கிய சோற்றுடன் பிற உணவுப் பொருட்களைக் கலந்து உண்டிருக்கின்றனர். கலக்கப்பட்ட பொருட்களுக்கு ஏற்ப, பல பெயர்களால் அவை அழைக்கப்பட்டன.


ஊன் சோறு : ஊனும் சோறும்

கொழுஞ்சோறு : கொழுப்பு நிணம் கலந்து ஆக்கியது

செஞ்சோறு : சிவப்பு அரிசிச் சோறு

நெய்ச்சோறு : நெய் கலந்தசோறு

புளிச்சோறு : புளிக்குழம்பு கலந்தசோறு

பாற்சோறு : பால் கலந்த சோறு

வெண்சோறு : வெள்ளிய அரிசிச் சோறு



அரிசியை மூன்று ஆண்டுக் காலம் பாதுகாக்கும் முறை பற்றிய தொழில்நுட்பம் பற்றிப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். (னு.ளு. ளுசiniஎயளய ஐலநபேயசஇ 1983இ ப.253)

இராச அன்னம் எனப்பட்ட உயர்வகை அசிரியினை பார்ப்பனர் உண்டனர் என்ற செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

பண்டமாற்றின் போது பெறுமதி மிக்க பொருளாக நெல் விளங்கியிருக்கின்றது. உப்பும் நெல்லும் ஒத்த பெறுமதி கொண்டதாக கருதப்பட்டிருக்கின்றது.

இருபுறமும் இரும்புப் பூண் கொண்ட உலக்கையால் உரலி;ல் இட்டு நெல் குற்றினர் என்ற செய்தியை,

“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த

அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு

கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (193-195)

எனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.



சங்ககாலத்தில் அரிசிப்பொரி வழக்கில் இருந்திருக்கின்றது. புழுங்கிய நெல்லிலிருந்து பொரி எடுத்த செய்தியையும் பொரியோடு பாலையும் கலந்துண்ணும் வழக்கம் இருந்ததையும் ஐங்குறுநூறு (53) தெரிவிக்கின்றது.



சங்ககால ஒளவையார், அதியமான் சிறுசோறு, பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார். தனிப்பட்ட ஒருவருக்கோ, சிறு குழுவிற்கோ வழங்கிய சோறு சிறுசோறு எனப்பட்டிருக்கலாம். மங்கல நிகழ்வையொட்டி சிறுசோறு வழங்கப்பட்தாகப் புறநானூறு (110) கூறுகின்றது. போர்வீரர்களுக்கும் பெரு நிகழ்வுகளிலும் வழங்கப்பட்ட சோறு பெருஞ்சோறு ஆகியிருக்கலாம். பாரதப் போரிலே பங்குபற்றிய வீரருக்கு சோறு வழங்கினான் என்பதற்காக “பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்” என ஒரு சேர மன்னன் அழைக்கப்பட்டிருக்கின்றான்.



நெல்லரிசி தவிர மூங்கிலரிசி, வரகரிசி, சாமையரசி, திணையரிசி, கம்பரிசி, இறுங்கரிசி என்பனவும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, பயறு, உழுந்து, எள், கொள்ளு, அவரைப் பருப்பு போன்ற தானியங்களையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இவ்வகை அரிசிகளோடு கூடி ஆக்கப்பட்ட உணவு வகைகளை பின்னர் நோக்குவோம்.

ஊன் உணவு

சங்கத் தமிழரின் பெருவிருப்புக்குரிய உணவாகத் திகழ்ந்தவை ஊன் வகையறாக்களே. ஊர்வன, பறப்பன என்பவற்றோடு பல்வகை விலங்குகளும் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. ஊனினைச் சுவைபட பல்வேறு விதங்களில் ஆக்கிப் பதப்படுத்தி உண்டிருக்கின்றனர். அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

ஊன், புலால், புலவு பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகையாக்கள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், ஆமான், முயல் போன்ற விலங்குகளும், உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக்கப்பட்டிருக்கின்றன. சில பிரிவினரால் மாடு உணவாக்கப்பட்ட செய்திகளையும் சங்க இலக்கியம் கூறுகின்றது.



உணவு சேரிக்கக் கானகம் சென்ற ஒருவன் பிடித்து வரும் உயிரிகளைப் பட்டியலிடுகின்ற நற்றிணை.



‘உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து

நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்

கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்’….-(நற்றிணை 59)



உடும்பினைக் குத்தித் தூக்கிக்கொண்டு, மண்ணைத் கிளறி வரித்தவளைகளைப் பிடித்துக்கொண்டும், உயரமான மண்புற்றுகளை உடைத்து அங்குள்ள ஈசல்களை அள்ளிக்கொண்டும் சுடவே ஓரு முயலினையும் கொண்டுவந்தான் வேடன்.



இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வேக வைக்கப்பட்டது வேவிறைச்சி என்றும், தீயில் வாட்டப்பட்டது சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது.



இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் இறைச்சியை உப்புக்கண்டம் போட்டு உண்ணும் வழக்கம் இருந்திருக்கின்றது.

இறைச்சித் துண்டங்களை இருப்புக் கம்பிகளில் கோர்த்து உப்பும் கருமிளகுத் பொடியும் கடுகும் சேர்த்து வாட்டியுண்டிருக்கின்றனர்.



வீரர்கள் தொடர்ந்து இறைச்சியைத் உண்டதால் நிலத்தை உழும் கலப்பையின் கொழு தேய்வதைப் போற் பற்கள் மழுங்கிப் போயின என்று பொருநர் ஆற்றுப்படை கூறுகின்றது.



இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி வற்றலாகவும் பயன்படுத்தியுள்ளனர்.



“இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்” என இச் செய்தியைப் புறநானூறு தெரிவிக்கின்றது.



இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும் பழக்கம் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கின்றது. கொதிக்கும் நெய்யில் இறைச்சி பொரிக்கும் போது எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு (386) கூறுகின்றது.



ஆட்டிறைச்சியைப் பற்றிய பல செய்திகள் சங்க இலக்கியமெங்கும் கூறப்பட்டிருக்கின்றன.



பரிசில் பெறச் சென்ற கூத்தன் ஒருவனுக்கு, தணலில் வேகப்பட்ட (தற்போதைய டீ டீ ஞ வகையைச் சார்ந்த) செம்மறியாட்டு இறைச்சியை கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி பொருநராற்றுப்படையில் இடம்பெற்றிருக்கின்றது.



“பதனறிந்து

துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்

பராஅரை வேவை பருகெனத் தண்டிக்

காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை

ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி

அவையவை முனிகுவ மெனினே..."



இது எவ்வாறான உணவு தெரியுமா? அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சி, இரும்புக் கம்பிகளில் குற்றி பக்குவமாகச் சூடாக்கி வேகவைக்கப்பட்டது. அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட, அதன் வெம்மை தாங்க முடியவில்லை. வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.



உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு.



உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் “முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு” என்ற பழைய தொடர் வழக்கிலிருந்திருக்கின்றது. அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடியிருக்கின்றனர்.



சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு நாய் கொண்டு பிடிக்கப்பட்ட உடும்புக்கறிப் பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த சிறப்பை என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.



“சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி

ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்

வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்" பெ.பா.ஆ.ப (129-133)



வேட்டையின் போது பெறப்பட்ட மான் இறைச்சியும் விரும்பிச் சுவைக்கப்பட்டிருக்கின்றது.



‘கோப்பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னன் தீ மூட்டும் கோலால் தீயை உண்டாக்கி, வேட்டையாடிய மானின் இறைச்சியைச் சுட்டு, வேட்டைக்குப்போன ஏனைய வீரர் வருவதற்கு முன்பாக உண்ணுமாறு கொடுக்கப் புவவர்கள் உண்டு பசி தீர்த்தனர்’ என்கின்றது புறப்பாடல் (150) ஒன்று.



இறைச்சிக்காக அக்காலத்தோரல் பெரிதும் விரும்பப்பட்ட மற்றுமொரு விலங்கு பன்றியாகும்.



‘நீரின்றி நிலம் வரட்சியுற்ற காலத்தில் நீர் பெறுவதற்கு வெட்டிய குழிகளில் பதுங்கியிருந்தவாறு நள்ளிரவில் வாகைப்பூவின் வடிவினைக் கொண்ட பன்றிகளின் வரவினை வேடுவர் எதிர்பார்த்திருப்பர்’ என்கிறது பெ.பா.ஆ.ப (106 -111)



இடித்த நெல்லைப் பன்றிக்கு உணவாகக் கொடுத்துக் கொழுக்க வைப்பர். அதனை பெண் பன்றியோடு சேரவிடாது குழிகளுக்குள் இட்டு வளர்த்து அதன் ஊனுக்குச் சுவை கூட்டிக் கொன்று கள்ளோடு உண்பர் என, மேலும் கூறுகின்றது பெ.பா.ப (34-35)



வேடுவர் முயலை வேட்டையாடி உண்டிருக்கின்றனர். திறந்த வாயையுடைய நாயோடு காட்டிற்குச் சென்று வேலிகளில் வலையைக் கட்டுவர். பின் பசிய பற்றைகளிலிருந்து முயலை வெளிப்படச் செய்து பிடிப்பர். பெ.பா.ஆ.ப (111-116)



சுவை கூட்டிய ஊன்கறியைச் சோறு, காய்கறி போன்ற பிற பொருட்களோடு சேர்த்து ஆக்கிய உணவுவகைகளைப் பின்னர் பார்ப்போம்.



நீருயிர் உணவு



நீர்வாழ் உயிரிகளான மீன், நண்டு, இறால், ஆமை, சிப்பி போன்றவற்றை பலவாறாகச் சமைத்து உண்டிருக்கின்றனர். நன்னீரிலும் கடலிலும் இவை பிடிக்கப்பட்டிருக்கின்றன.



நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன்பிடித்தலாகவே இருந்தது. சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்திருக்கின்றனர். மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டில் பயன்படுத்தியிருக்கின்றனர். குறித்தவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் பயன்படுத்தியிருக்கின்றனர் (நாஞ்சில் நாடன்).



இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர். மீன்களை உப்புக்கண்டம் போட்டு உலர வைத்து கருவாடாக்கியிருக்கின்றனர். சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டிருக்கின்றனர்.



மருதம் போன்ற பிற நிலத்தார் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். நீர் நிறைந்த வயல்களின் அகப்ட்ட மீன், நண்டு, ஆமை என்பன உணவாக்கப்பட்டிருக்கின்றன.


‘சுறவு கோட்டன்ன முள் இலைத் தாழை,’

‘கருங்கண் வரால்,’

‘கடுஞ்சுறா எறிந்த கொடுந் திமில் பரதவர்,’

‘இருஞ் சேற்று அயிரை,’

‘ஒழுகு நீர் ஆரல்,’

‘கணைக் கோட்டு வாளை’

என்ற மீன் வகைகளோடு 17 வகையான மீனினங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.



அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் எண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. (பெரும்பாண் 280, குறும் 320, பட்டினப் 63, நற்றிணை 60)



வாளைமீனைச் சமைத்து உவியல் என்னும் தொடுகறி செய்ததையும் சோற்றுடன் அதைச் சேர்த்து உண்டதையும் புறநானூறு (395) கூறுகின்றது. பெரும்பாலும் பழஞ்சோற்றுக்கு இக்கறி கூட்டாக இருந்திருக்க வேண்டும்.



அயிரை மீன் துண்டுடன் புளிக்கறி ஆக்கி முரல் வெண் சோற்றுடன் உண்ட செய்தியையும் புறநானூறு(60 - 4-6) கூறுகின்றது.



நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தனர். அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவை பொரிக்கப்பட்டிருக்கின்றன. பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றிருக்கின்றனர். (தமிழர் உணவு. பக். 110)



குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர். நெய்தல் நிலவழியாகச் சென்றால் இத்தகைய குழல் மீன் கருவாட்டை உணவாகப் பெறலாம் என்பதை,



“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்”

என சிறுபாணாற்றுப்படை (163)

நெய்தல் நில மக்களின் உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.



நெய்தல் நிலக் கள்ளுக்கடைகளில் மீன் வறுவல் விற்கப்பட்டிருக்கின்றது.





காய்கூட்டு(கறிகள்.)



தொ. பரமசிவன் தமிழர் உணவு என்ற கட்டுரையில் காய்கறி என்ற சொல்லைக் கீழ்வருமாறு விளக்குகின்றார்.



“காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். மிளகாய் அறிமுகமாகும்வரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி சமைக்கும்போது அதிகமாக மிளகினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே 'கறி ' எனப் பின்னர் அழைக்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.”



இன்றைய நாட்களில் எமக்குக் கிடைக்கின்ற காய்கறிகள் அப்போது இருக்கவில்லை. வழுதுணங்காய் என அழைக்கப்பட்ட கத்தரி, பாகல், பீர்க்கு, அவரை, முருங்கை, பல்வேறு கீரை வகைகள், அவரைப் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை என்பனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.



வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் உண்ணப்பட்டிருக்கின்றன.



தற்போது பெரிதும் பயன்படுகின்ற வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், மரவள்ளி, சக்கரைவள்ளி, உருளைக்கிழங்கு மைசூர்ப் பருப்பு, தேங்காய், பழப்புளி என்பன சங்ககாலத்தில் இருக்கவில்லை.



கடுகு, கருமிளகு, வெண்மிளகு, மஞ்சள், இஞ்சி, சீரகம் என்பனவும் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



வடஇந்தியாலிருந்து இஞ்சியும், சீனாவில் இருந்து மஞ்சளும் சங்ககாலத்திற்கு முன்போ அல்லது தொடக்கத்திலோ தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என பேராசரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி ‘தாவரமும் தமிழரும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.



முருங்கைக்காய் சங்ககாலத்திற்கு முன்னரே ஈழம்வழியாக வந்திருக்கலாம் என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகின்றார்.



தேங்காய் பிலிப்பைன் தீவுகளில் இருந்து ஈழம் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்திருக்கலாம் என்பதுவும் பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தியின் கூற்று.



வெங்காயம், பெர்சியா மற்றம் ஆப்கானிலிருந்து 10ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சிலி நாட்டிலிருந்து மிளகாயும், ஐரோப்பிய நாட்டிலிருந்து உருளைக்கிழங்கும் போத்துக்கீயரால் 16ம் 17 நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டன.



பாதாம் பருப்பு, கிராம்பு என்பனவும் ஈழம் வழியாகத் தமிழகத்தி;ற்கு வந்தவையே என்பது பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி கருத்தாகும்.



சங்ககாலத்தோர் தமிழ் நிலத்திற்கே உரித்தான பனைமரத்தைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். பல உணவுப் பொருட்களைப் பனையிலிருந்து பெற்றிருக்கின்றனர்.



எனினும் 200க்கு மேற்பட்ட உணவுக்குரிய இயல் தாவர வகைகளை சங்கஇலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.



காய்கறிகளை வேறுபொருட்களோடு கூட்டிச் சுவைபட சமைத்து இறைச்சி, சோற்றுடன் கலந்து உண்டிருக்கின்றார்கள்.



உணவுக்குச் சுவை கூட்டும் உப்பு சங்ககாலத்திற்கு முன்பே பாவனைக்கு வந்துவிட்டது. சங்க காலத்தில் உப்பு, விலை உயர்ந்த பொருளாகக் கருதப்பட்டது. “நெல்லும் உப்பும் நேராகும்” என்பதே அன்றைய நிலை. உமணர் என்போரே உப்பை விளைவித்து விற்பனை செய்தனர்.



தேன் அதிகம் பெறப்படுகின்ற குறிஞ்சி நிலத்தோருக்கு மட்டுமல்ல, ஏனைய நிலத்தோருக்கும் உயர்ந்த உணவுப்பொருளாகத் திகழ்ந்தது தேன். தேனைத் தனி;த்தும் வேறு பல உணவுகளோடும் கூட்டி உண்டிருக்கின்றனர்.

கனிகள்

சங்ககால மக்கள் பல்வேறு கனிகளை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

மா, பலா, வாழை என்பவற்றோடு மாதுளம்பழம், நெல்லி, நாவற்பழம் நாரத்தம் பழம், கொவ்வை, ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம் (இலந்தை) போன்றவற்றை அக்காலத்தோர் விரும்பி உண்டிருக்கின்றனர்.



வாழை ‘கதலி’ என்ற பெயரிலேயே இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.



‘பெரும்பெயர் ஆதி’ என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.



“கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்

பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்

டெயினர்” (புறம் 177 11-3)



உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை,



'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

தாத னின்னகத் தடக்கிக்

சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)

எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.



அன்னாசி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. அயல்நாடு சென்று வந்த வணிகர் பின்னாளிலேயே இவற்றை எடுத்து வந்தனர்.



அன்னாசி, பப்பாளி மலேசியாவிலிருந்தும், கொய்யா பெரு நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.





சிறப்புக்குரிய உணவு வகைகள்.



மேற்கூறப்பட்ட அரிசி வகைகள், தானியங்கள், ஊன் வகைகள், காய்கறிகள் என்பவற்றைக் கொண்டு சுவை மிக்க உணவுகளை ஆக்கிப் படைத்துள்ளனர் எம் முன்னோர். இன்று அந்நியப் பெயரில் அழைக்கப்படும் பல உணவுகள் சங்கத் தமிழர் உருவாக்கியவையே.



ஊன்சோறு: இன்று பிரியாணி என அழைக்கப்படும் இவ்வுணவு ஊன்சோறு என்ற பெயரால் சுவைமிக்க உணவாக அன்று ஆக்கப்பட்டிருக்கின்றது. இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐவகை நிலத்தாரும் பல்வகை உணவு முறைகளில் வேறுபட்டிருந்தாலும் ஒன்றுபட்டிருந்த ஓர் உணவுவகை ஊன்சோறுதான். பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சோற்றினை உண்டு மகிழ்ந்துள்ளனர்.



அக்காலத்தே சமையற்காரன் வாலுவன் என அழைக்கப்பட்டிருக்கின்றான். அத்ததைய வாலுவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி

ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.



"துடித்தோட்கை துடுப்பாக

ஆடுற்ற ஊன்சோறு

நெறியறிந்த கடிவாலுவன்"(மதுரைக்காஞ்சி 34 - 36)



வெண்சோற்றுடன், நெய் கலந்து, ஆட்டிறைச்சி சேர்த்து சமைத்துண்டனர்

என்ற செய்தியை நற்றிணை புலப்படுத்துகின்றது.



“மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்" (நற்றிணை 83, 4-9 வரிகள்)





சோறும் மரக்கறிகளும்



இறைச்சி வகையன்றி மரக்கறி உணவுகளும் அக்காலத்தே சிறப்புப் பெற்றிருந்தன. கடினமற்ற மென்மையான உடையாத முழு அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல் போல் நிமிர்ந்து தனித்தனியாக இருக்கின்றது. அதை பால் விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும், புளிக்கறிகளோடும் நிறைவாக உண்போம் என பொருநர் எனப்படும் கலைஞர் கூட்டத்தார் கூறுகின்றனர்.



முரவை போகிய முரியா அரிசி

விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்

பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப

அயின்ற காலை” பொ. ஆ. ப. (113-116)





புளிக்குழம்பு



அக்காலத்தே புளிக்குழம்பு அல்லது புளிக்கறி பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் சோற்றுடன் புளிக்குழம்பைக் கூட்டி உண்டிருக்கின்றனர். இப்போது நாம் பயன்படுத்து;ம புளி அக்காலத்தில் இருக்கவில்லை. புளிச்சுவைக்காக நாரத்தம் (எலுமிச்சை) காய்களைப் பயன்படுத்தியுள்ளனர். மாங்காய்ச் சாற்றினைச் சேகரித்து வைத்து புளிச்சுவை கூட்டியிருக்கின்றனர்.



நெல்லிக்காய், துடரிக்காய் என்பனவும் புளிச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



புளிச்சுவையோடு கூடிய சோற்றைப் புளிச்சோறு, புளிக்குழப்புச் சோறு என அழைத்திருக்கின்றனனர். மீன் இட்டும் புளிக்கறி ஆக்கப்பட்டிருக்கின்றது. புளிக்குழம்பில் தயிர் மோர் என்பனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. (கு.தொ.167)



அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவர்; உண்டனர் என்பதை மலைபடுகடாம் கூறுகின்றது.



“செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த

சுவல் விளைநெல்லின் அவரையும் புளிங்கூழ்

அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட.....” மலைபடுகடாம் (434-443)



குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த கானகர் எனப்பட்ட வேடுவர் வீட்டில் இறைச்சி வகையறாக்களோடு புளி சேர்த்து உணவு சமைக்கப்பட்டதை கூத்தராற்றுப்படை கூறுகின்றது.



“வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்

இன்புளிக் கலந்து மாமோ ராகக்

கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..." கூத்தராற்றுப்படை



‘நன்கு ஆக்கப்பட்ட கடமானின் கொழுப்பு மிக்க தசையும், பன்றித் தசையும் உடும்புக் கறியும் தருவார்கள். அத்துடன் புளியும் மோரும் இட்டு உலையேற்றிச் சமைத்த மூங்கில் அரிசிச் சோறும் தருவார்கள்’ என்கிறார்

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.





சோறும் ஊன்கறியும்.



சோற்றோடு ஊன்கறி சேர்த்து உண்டலே சங்ககாலத்தில் பெருவழக்காக இருந்தது. இவ்வுணவு வாழிடச் சூழலுக்கு ஏற்பவும், செல்வநிலைக்கமையவும் வேறுபாடு கொண்டிருந்தது.



மன்னர், நிலவுடமையாளர்; போன்றோர் விருந்தினரைப் போற்றும் வகையில் நெய்யிட்டு ஆக்கப்பட்ட இறைச்சியோடு பலவகைச் சோறும் வழங்கியிருக்கின்றனர்.



இத்தகைய விருந்துண்ட புலவர் பலர் தம் உணர்வையும் உணவின் சுவைகளையும் இலக்கியங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.



“அவன் எமக்கு வழங்கிய சுவைமிக்க சூட்டிறைச்சி பற்றிச் சொல்வேனா, இல்லை வளமான மனைக்குரிய கள் பற்றிக் கூறுவேனா இல்லை, குறுமுயலின் தசை கலந்து தந்த நெய் மணக்கும் சோற்றைச் சொல்வேனா” என்கிறார் ஒரு புலவர்.



கொழுந்தடிய சூடென்கோ

வளமனையின் மட்டென்கோ

குறுமுயலின் நிணம் பெய்த

நறுநெய்ய சோறென்கோ” - புறநானூறு “:396“



கரும்பனூர்க் கிழான் என்னும் சிற்றூர்த் தலைவன் வழங்கிய விருந்து குறித்து நன்னாகையர் என்னும் புலவர் புறநாநூற்றில் குறிப்பிடுகின்றார்.



ஊன் கலந்த சோற்றுணவில் நீரை விட அதிகளவு நெய்யிட்டுச் சுவை மிகக் கூட்டி சூடு குறையாது நாள்தோறும் தானும் உண்டு மற்றவர்களுக்கும் தந்தான். உண்ணமுடியாமல் எஞ்சிய உணவை இலை மடித்து எறிந்த நாட்களையும், பல்லில் சிக்கிக்கொண்டவற்றைத் தோண்டி எடுப்பதற்குமாகக் கழிந்த நாட்களையும் எண்ண முடியாது என்கிறார்.



“நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

மண்ணாணப் புகழ் வேட்டு

நீர்நாண நெய் வழங்கிப்

புரந்தோனெந்தை யாமெவன்றொலைவதை

அன்னோனையுடைய மென்ப வினிவறட்கி

யாண்டு நிற்க வெள்ளி மாண்டக

உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்

தின்ற நன் பல் ஊன் தோண்டவும்

வந்தவைகலல்லது

சென்ற வெல்லைச் செலவறியேனே” – புறநானூறு : 384


புற்றீசல் புளிக்குழம்பு



மழைக்காலத்தில் தோன்றி குறுகிய நாட்களே வாழும் ஈசல்கள் சுவை மிகுந்த உணவாகப் பயன்பட்டிக்கின்றன.



செம்மையான புற்றிலிருந்து பிடிக்கப்பட்ட ஈசலை வறுத்து மோரில் ஊற வைத்துப் புளிக்கறி செய்தனர். இச் செய்தியை,



செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து

மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லேர்..” என புறநானூறு (119) கூறுகின்றது.



ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பதற்கு அகநானூற்றுப் பாடல் ஒன்றும் சான்று தருகின்றது.



“சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்

இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு

கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து

ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு

சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக

இளையர் அருந்த …” (அகநானூறு - 394: 1- 7)



சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசியோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர்.

பாலுணவு



சங்ககாலத்திற்கு முன்பே தமிழர்கள் பாலுணவு பற்றி நன்கு அறிந்திருந்தனர். வேட்டைச் சமூகநிலைக்கும் வேளாண் சமூகநிலைக்கும் இடைப்பட்ட காலத்தே மந்தை வளர்ப்பு தோற்றம் கொண்டிருக்கலாம். தொடக்கத்தில் பால், இறைச்சி என்பவற்றிற்காக மந்தை வளர்ப்பில் ஈடுபட்டாலும் பி;ன்னாளில் எருது போன்ற விலங்குகள் வேளாண் தொழிலுக்குப் பேருதவி பரிந்தன. இவ்வுதவிகளே பின்னாளில் மாட்டிறைச்சி உண்ணுதல் வழக்கற்றுப்போகக் காரணமாக இருந்திருக்கலாம்.



மிக நீண்டகாலத்தி;ற்கு முன்பாகவே தமிழர் பாலைப் புளிக்க வைத்துத் தயிராக்கவும். தயிரைக் கடைந்து மோர், வெண்ணெய், நெய் என நுட்பமாகப் பிரித்துப் பயன்படுத்தவும்; கற்றுக்கொண்டிருந்தனர்.

முற்றிய தயிரில் புளிக்குழம்பு செய்யப்படிருக்கின்றது. குளிர்ந்த மோர் சிறந்த பானகமாகக் கருதப்பட்டது. வெண்ணெய் பெறுமதி மிக்க உணவுப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது.



“நறுமோர் வெண்ணெயின்...” என மோர் கடைந்து வெண்ணை எடுக்கப்படுவதனை பெரும்பாணாற்றுபடை கூறுகின்றது.



பசுநெய் பெரும்பாலும் செல்வர்களாலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.



அக்காலத்தில் மாடுகளே பெறுமதி மிக்க செல்வங்களாகக் கருதப்பட்டன. ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்பன தமிழது போர் மரபுகளாகும்.

பார்ப்பனர் உணவு

வேதங்கள் ஒதும் பார்ப்பனர் சங்ககாலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய பல குறிப்புகள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஊன் உணவை முற்றிலும் தவிர்த்துக் காய்கறிகளையே பெரிதும் உண்டனர்.

தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய பார்ப்பனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இப்பார்ப்பனர் பாற்சோறும், பருப்புச் சோற்றும் உண்பர். அவர்கள் இராசா அன்னம் என்ற பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினை விரும்பி உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும் உண்பர்.

தயிர்ச்சோறு, மாங்காய்ச்சோறு, புளியஞ்சோறு போன்ற உணவு வகைகளையும் உண்பர். தம் வீட்டுக்கு வந்தோருக்கும் அவற்றைக் கொடுத்து மகிழ்வர். இச்செய்தியைப் பெரும்பாணற்றுப்படை (301-310) கூறுகின்றது.

மறையோர் வீட்டிற்குச் சென்றால் ‘கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெயில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம்’ என்று பாணன் கூறுவதாகப் பெரும்பானாற்றுப்படை மேலும் கூறுகின்றது.

செல்வந்தர் உணவு

வேட்டுவநிலையிலிருந்து வேளாண்நிலைக்குச் சமூகம் உயர்ந்தபோது

நிலவுடமைச் சமூக முறைமை தோற்றம் கொண்டது. நில உடைமையாளர்களாக ‘ஆண்டை’களும், தொழிலாளர்களாகக் ‘களமர்’களும் சமூக அமைப்பில் அங்கம் பெற்றனர். இச் சமூக மாற்றம் செல்வநிலையிற் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. செல்வந்தர்; பெரும் செழிப்புடன் வாழ்ந்தனர். அவர்களது உணவுப் பழக்கமும் உயர்ந்ததாகவிருந்தது.



கடின வேலைகள் செய்து பழக்கப்படாத செல்வர், வீடுகளில் இருந்தபடியே உண்டு மகிழ்ந்தனர். அவர்களது உணவு முறைக்கு ஒரு சான்று தருகின்றது புறநானூறு.



“நீர் நிறைந்த குளத்தில் விழுகின்ற மழைத்துளிகளைப் போன்று, துள்ளித் தெறிக்கின்ற புதிதாக உருக்கிய நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளின் வறுவல்களை மணம் நுகர்ந்து உண்பர். சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட இறைச்சித் துண்டுகளையும் உண்பர். வெள்ளியாலான பாத்திரத்தில் பால் வழியவும் சுடச்சுட உண்பர். இதனால் அவர்கள் உடல் வியர்த்ததேயன்றி, செய்கின்ற தொழிலால் உடல் வியர்த்தில்லை” என்கிறார் புலவர்.



‘நெடுநீர நிரை கயத்துப்

படுமாரித் துளிபோல

நெய்துள்ளிய வறை முகக்கவும்

சூடுகிழித்து வாடூன் மிசையவும்

ஊன் கொண்ட வெண்மண்டை

ஆன் பயத்தான் முற்றளிப்வும்

வெய்துண்ட வியர்ப்பல்லது.

செய்தொழிலால் வியர்ப்பறியாமை’ - புறநானூறு : 386



வளம்;மிக்கவர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர். இதனை,



“தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை

மல்லல் பேரூர் மடியின் மடியா

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி

மனைவாழ் அளிக்ன் வாட்டொடும் பெறுகுவீர” (253-256)



எனப் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.



உழவோர் உணவு

வேளாண் சமூகத்தில் உழவர்களே மிகுந்திருந்தனர். பெரும்பாலானோர் அன்றாடம் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் உண்ட உணவு பற்றிப் பல குறிப்புகள் உள்ளன.



கிள்ளிவளவனின் சோழ நாட்டில், சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குற்றி அரிசியாக்குவாள். அந்த அரிசியால் ஆக்கிய சோற்றை, புளித்த நீருள்ள உலையில் இடுவாள்.



மாமரத்தின் இனிய மாம்பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக்குழம்பும், பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறாமீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற்காயும், பாதிரி அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்துப் பின் அவித்த சோற்றுடன் உழைப்போர்க்குப் பரிமாறுவாள்.



வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர். இச் செய்தியைப் புறநானூறு (399) தருகின்றது.



‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாணுலக்கைப் பரூஉக் குற்றரிசி

காடி வெள்ளுலை கொளீஇ நீழல்

ஓங்கு சினைமாவின் தீங்கனி நறும்புளி

மோட்டிரு வரா அற் கோட்டு மீன் கொழுங்குறை

செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகற்

பாதிரி யூழ் முகையவிழ் விடுத்தன்ன

மெய்களைந்தினனொடு விரைஇ

மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்

அளிகளிற் படுநர் களியட வைகிற்

பழஞ்சோறயிலும்’ - புறநானூறு : 399



நன்செய் நிலம் என அழைக்கப்டுகின்ற மென்மையான மருத நிலத்து வயல்களைச் சார்ந்த உழவர் காடும் புல்லும் நிறைந்த முல்லை நிலத்தில் தம் மாடுகளை மேயவிட்டுக் களைப்பாறுவர். அவ்வேளை, குறு முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நீண்ட வாளைமீனைக் கொண்டு செய்த அவியலைப் பழைய சோற்றுடன் உண்பர்.


‘மென்புலத்து வயலுழவர்

வன்புலத்துப் பகடுவிட்டுக்

குறு முயலின் குழைச் சூட்டொடு

நெடுவாளைப் பல்லுவியற்

பழஞ்சோற்றுப் புக வருந்தி - புறநானூறு : 395



வரகரிசிச் சோற்றை, அவித்த அவரைப் பருப்புடன் கலந்து உழவர் உண்டு வந்தனர். அதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.


“நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன

குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி

புகர் இணர் வேங்கை வீசுண்டன்ன

அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று

இன்சுவை மூரல் பெறுகுவிர்” (192-196)


இது ஏழை உழவர்களின் எளிமையான உணவாக இருந்தது.


அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை, நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த ஏழைகள் உண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தியை மலைபடுகடாம் (434-443) குறிப்பிடுகின்றது.


இவ்வாறே வேடவர், பரதவர், எயிற்றியர், எயினர் எனப்பட்டோரும் தமக்கெனத் தனித்துவமான உணவு வகைகளைக் கொண்டிருந்தனர்.


நீரியல் உணவு


அக்காலத்தோரின் நீரியல் உணவு வகைகளில் முதன்மையானவை கூழும் கஞ்சியுமாகும். அதிகளவில் நீர் கலந்து சோறு கரையுமளவிக்கு வேக வைக்கப்பட்ட உணவு கஞ்சி எனப்பட்டது. அரிசி, வரகு, கேப்பை. கம்பு போன்ற தானியங்களைக் கொண்டும் கூழ் ஆக்கப்பட்டது.


சோறு வடித்த கஞ்சி ஆறுபோல் ஓடியது என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.


சோறு வாக்கிய கொழுங் கஞ்சி

யாறு போலப் பரந்து ஒழுகி,

என வருணிக்கிறது. (வரி 44-45)


பழந்தமிழர் பலவகையான பருகுநீர் வகைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் சில, இளநீர், கரும்புச்சாறு, நுங்கு, பானகம், பாயசம், அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர், மது என்பனவாகும்.


ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டுச் சாறு பிழிந்தனர் என்ற செய்தியை “கரும்பி னெந்திரங் கட்டினோதே” என்ற வரிகளின் வாயிலாக மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது.


சங்ககாலத்துச் சி;ற்றுண்டிகள்


சங்கத்தமிழர் பல சிற்றுண்டி வகைகளை அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று தருகின்றன.


கும்மாயம் என்ற ஒருவகைச் சிற்றுண்டி பற்றிப் பெரும்பாணாற்றுப்படை 194-95) குறிப்பிடுகின்றது. இது பயற்றுடன் சர்க்கரை சேர்த்துச் செய்யபப்டுவதாகும்.


இனிப்புச்சுவைக்காகக் கருப்பஞ்சாற்றைக் கட்டியாக்கிப் பயன்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (259) தருகின்றது. பின்னாளில் இதுவே வெல்லக்கட்டியானது.


மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அடை என்றால் இலை என்று பொருள். இது இலை வடிவினதான பலகாரமாக இருக்கலாம்.


வெல்லப் பாகையும் பாலையும் கலந்து செய்த பண்ணியம் என்னும் உணவுப் பொருள் பற்றிப் புறநானூறு தெரிவிக்கின்றது


'உனு மூணு முனையி னினிதெனப்

பாலிற்பெய்தவும் பாகிற் கொண்டனவும்” (புறநானூறு 381).



பொருட்களைக் கூவி விற்பதால் கூவியர் எனப்பட்ட வணிகர் 'கரிய சட்டியில் பாகுடனே வேண்டுவன கூட்டி நூல்போல் அமைத்தவட்டம்” என ஒருவகைச் சிற்றுண்டியை விற்றதாகப் பெரும்பாணாற்றுப்படை (377-378) கூறுகின்றது.



“மதுரை நகரக் கடைத்தெருவில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அவற்றிற் பாகினால் செய்யப்பட்ட நல்ல வரிகளுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடைகள் செய்யப்பட்டன. பருப்பை உள்ளீடாய்க் கொண்டு, சர்க்கரை கூட்டிப் பிடித்த 'மோதகம்” என்ற ஒரு வகைத் தின்பண்டமும் செய்யப்பட்டது. இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவைக் கொண்டு கூவியர் பல சிற்றுண்டி வகைகளைச் செய்தனர்” என மதுரைக் காஞ்சி (624-627) குறிப்பிடுகின்றது.



பொரியையும் பாலையும் கலந்து உண்ணும் வழக்கம் மிகப் பழமையானது. ஐங்குநூறு (53) இதைக் கூறுகின்றது. இப்போது உண்ணப்படுகின்ற ‘சீரியலை’ இது ஒத்ததாகும்.

ஊறுகாய் வகைகள்.



சங்கத்தமிழர்கள் பலவகையான ஊறுகாய்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். மாங்காயில் நல்ல மிளகு கலந்து கறிவேப்பலை தாளித்து ஊறுகாய் செய்யும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (307-10) கூறுகின்றது. இதே போன்று மாதுளங்காய் ஊறுகாயும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.



“குடும்பத்துடன் உப்பை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராய்ச் சென்று வாணிகம் செய்துவந்த உமணர், ஊறுகாய்ப் பானைகளைத் தம் வண்டிகளில் கட்டியிருந்தனர். அந்த ஊறுகாய், 'காடி' எனப்பட்டது. அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் 'காடி வைத்த கலம்' எனப்பட்டது. 'புளியங்காய், நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் 'காடி' என்றார்,' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம்” என இராச மாணிக்கனார் ‘சங்ககாலத்து உணவும் உடையும்’ என்ற தன் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.





சமையல் நுட்பங்கள்



சங்கத்தமிழரின் உணவு முறைகளில் அதிகமாகக் காணப்பட்ட உணவுப் பொருட்கள் நேரடியாக இயற்கையிலிருந்து கிடைக்கப்பட்டவையே. காய்கறி, கனி, கிழங்கு, ஊன்வகை போன்றவற்றை இயற்கையிடத்தே பெற்றுப் பச்சையாகவும்; வேகவைத்தும் உண்டனர்.



உணவுத் தேடலுக்கான வேட்டையாடுதலே உணவுத்தொழில்நுட்பத்தை நோக்கிய தொடக்கம் எனலாம். குறித்த விலங்கினத்தைப் பிடிக்க கையாண்ட உத்திகளும், கண்டறிந்த வேட்டைக் கருவிகளுமே உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான தொடக்கச் சிந்தனைகள் ஆகும்.



வேடுவ சமூகத் தளத்தில் இருந்து ஆநிரை சமூகநிலைக்கு நகரும்போது இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடைகின்றது. பாலிலிருந்து தயிர் மோர், வெண்ணெய், நெய் உருவாக்கக் கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.



மீன் பிடித்தல் மிக தொன்மையான தொழில். தூண்டில், வலைவீசுதல், உளி எறிதல் போன்ற போன்ற நுட்பங்கள் அன்றே பயன்படுத்தப்பட்டுள்ளன.



உணவைச் சுட்டுத்தின்ற காலத்தை தொடர்ந்து நீரில் வேகவைத்து உண்ணும் நிலைக்கு சமூகம் உயர்ந்தமைக்குக் காரணம் மட்பாண்டங்களின் பயன்பாடடை அறிந்தமையே. பலவகையான மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்களை அக்காலத்தோர் அறிந்து வைத்திருந்தனர். அகழ்வாய்வின் போது கிடைக்கப்பபெற்ற மட்பாண்டங்கள் இதற்குச் சான்று தருகின்றன.



சமூகநிலை மாற்றத்தின் அடுத்த தளமான வேளாண் நிலையே மேலும் பல நுட்பங்கள் தோன்ற வழிவகுத்தது.



உப்பு, நெய், மிளகு, கடுகு என்பவற்றை என்பவற்றை வேண்டிய அளவு சேர்த்துத் தாளிதம் செய்யும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். புளியிட்ட உணவு எளிதில் பழுதடையாது என் அறிந்தனர்.



நெல் குற்ற உரல் உலக்கையையும், அரைப்பதற்கு அம்மியையும் (நெடுநல்வாடை 50) கொழிப்பதற்குச் சுளகையும் உருவாக்கினர். உலர்ந்த சுரைக்காயும், மூங்கிற் குழாய்களும் நீர் கொண்டு செல்லப் பயன்பட்டிருக்கின்றன.



பல்வகையான நுட்பங்களுடன் பல்தரப்பட்ட மது வகையறாக்களை வடிக்கக் கற்றுக்கொண்டனர்.



கரும்பிலிருந்து பல படிமுறைகளினூடாகக் கருப்பங்கட்டியை உருவாக்கத் தெரிந்திருந்தனர்.



நிறைவுரை



சங்கத்தமிழரது உணவு மரபுகள் பற்றிய பல செய்திகள் இதுவரையில் மேலே கூறப்பட்டன. பெரிதும் சங்க இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இச் செய்திகள் பெறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியவை. சில பாடல்கள் காலத்தால் மிக முற்பட்டவை எனக் கருத இடமுண்டு.



இந்தக் காலஇடைவெளிகளை சங்கத்தாரது உணவப் பண்பாட்டிலும் காணலாம்.



ஒரே காலகட்டத்திலும் கூட, நில அமைவுகளும் போக்குவரத்து வசதியின்மையும் சங்ககாலத்தோரது வாழ் களங்களுக்கடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தன. குறிஞ்சியில் பெறப்பட்ட தேன், நெய்தல் நிலத்தாருக்கு அரிய பொருள் ஆனது. நெய்தலில் விளைந்த உப்பு குறிஞ்சியாருக்கு எட்டாப் பொருளாயிற்று. பெரும் பணியினூடாகப் பெறப்பட்ட பசுநெய் பலருக்கும் கிட்டாத பெறுமதி மிக்கதானது. மருதத்தில் விளைந்த நெல் மலைக்கும் அலைக்கும் எளிதிற் கிடைக்கவில்லை.



எனினும் தத்தமது சூழலில் விளைந்த, பெறப்பட்ட உணவுவகைகளைக் கொண்டு குறைவிலாது தம் தேவைகளை நிறைவேற்றினர் சங்கத் தமிழர். பெரும் ஆடம்பரமற்ற எளிமையான உணவுப் பழக்கமே சங்கம் எங்கும் பெரிதும் விரவிக் கிடக்கின்றது.



பிற இனத்தாரது பண்பாட்டுப் படையெடுப்புகளால் பாதிக்கப்படாத தனித்துவமான உணவுப் பொருட்களும் சமையல் முறைகளும் சங்ககாலத்திலேயே காணப்பட்டிருக்கின்றன. சங்கத்தை அடுத்த அறநெறிக்காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பெற்ற செல்வாக்கு தமிழர் உணவு மரபில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் தமிழர் உணவில் முதன்மையுற்றிருந்த ஊன்வகைகள் பின்தள்ளப்பட்டன. உணவொழுக்கத்தில் சைவம் அசைவம் போன்ற பாகுபாடுகள் தோன்றின. இறை வழிபாடு தழுவிய நோன்பு முறைகளும் மரக்கறி உணவுகளும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கின.



இம்மாற்றங்கள் சமூக வளர்ச்சியின் பரிணாமப் படிகள் என எடுத்துக்கொண்டாலும் தமிழரின் தனித்துவ மரபுகள் இ;மமாற்றங்களினால் திரிபுகளுக்கு உட்பட்டதை நாம் ஏற்றாக வேண்டும்.



தமிழர் வாழ்வியல் நீட்சியில் எம் பழம்பெரும் பண்பாட்டை உணர்ந்து கொள்வதற்குச் சங்ககாலத்து உணவு மரபுகள் பெரும் துணை செய்கின்றன.



துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:



தமிழர் உணவு: பக்தவத்சல பாரதி

பண்பாட்டு அசைவுகள்: தொ.பரமசிவன்

முல்லைநில உணவு முறைகள்: முனைவர் சு. அரங்கநாதன்

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை

தமிழரும் தாவரமும்: பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி

சங்ககாலத்து உணவும் உடையும்: மா.இராசமாணிக்கனார்.

பண்டைத் தமிழர் உணவுகள்: முனைவர் சி. சேதுராமன்

புறநானூறு

பெரும்பாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பரிபாடல்

மதுரைக்காஞ்சி

நற்றிணை

பட்டினப்பாலை

அகநானூறு