இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். அதற்கு மந்திரம் என்று பொருள். வடமொழியாளர்கள் குறிப்பிடுவதைப் போல ‘வடவேதமான ரிக் வேதத்தை’ குறிப்பிடுவது அல்ல. நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.
தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.
இருக்கு ரிக் ஆனதற்கு ஓர் எடுத்துக்காட்டு:
மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) பாடல் வரிகள் 25 - 32
“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே”
இதில் வரும் இருக்கொடு என்ற வார்த்தைக்கு வடமொழியாளர்கள் மாணிக்கவாசகர் ரிக் வேதத்தை குறிப்பிட்டார் என்று பொய்யுரை புனைகிறார்கள். ஏன் மாணிக்கவாசகர் யஜுர், சாம அதர்வணத்தை சொல்லவில்லை? பாவம் வடமொழியாளர்கள் அதற்கேற்றார்போல் ஏதாவது தமிழ் வார்த்தை தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? இதில் வடமொழியாளர்களைச் சொல்லிக் குற்றமில்லை! தமிழன், தம் பாட்டன் பூட்டன் சொத்துக்களை அறியாத வரை, மதிக்காத வரை இது தொடரத்தான் செய்யும்.
மேற்கண்ட பாடலின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) வரிகளின் உண்மைப்பொருள் பின்வருமாறு.
(விடியற்காலையில் இறைவனை வழிபடும்போது)
இனிய ஓசையிசைக்கும் வீணையை உடையவர் ஒரு பக்கம்
யாழ் வாசிப்போர் பிறிதொரு பக்கம்
மந்திரங்களோடு துதிப்பாடல்களையும் ஓதுவோர்கள் ஒரு பக்கம்
நெருக்கிக் கட்டப்பட்ட மலர் மாலை ஏந்திய கையினர் ஒரு பக்கம்
தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர் ஒருபக்கம்
தலையிற் கைகுவித்தவர் ஒரு பக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே
(தகுதியற்ற) அடியேனையும் ஆட்கொண்டு இனிய பேரருள் செய்யும் எமது தலைவனே, திருப்படுக்கை விட்டு எழுந்தருள்க.
மனிதர்களை ஏமாற்றுவார்கள். கேள்விப்பட்டுள்ளோம். கடவுளையாவது விட்டு வைக்கக் கூடாதா?
எத்தனை நாள்தான் துயில்வாய் ? தமிழா பள்ளி எழுந்தருள்வாய் !

No comments:
Post a Comment