Monday, 13 October 2014

தெய்வத்தமிழுக்கு அடைமொழிகள்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் போன்றோர் தமிழகத்தில் ஊர் ஊராகச் சென்று தமிழைப் பரப்பினர்; தமிழ் இசையைப் பரப்பினர்; பக்தி இயக்கத்தைப் பரப்பினர்.
திருஞான சம்பந்தர் தெய்வத்தமிழுக்கு சொன்ன அடைமொழிகள்
1 அருந்தமிழ்,
2 ஆரா அருந்தமிழ்,
3 இசைமலி தமிழ்
4 இன் தமிழ்
5 இன்புறுந்தமிழ்,
6 உருவாகும் ஒண்டமிழ்,
7 உரைசெய் தமிழ்,
8 எழுதுமொழி தமிழ்,
9 ஏரினார் தமிழ்,
10 ஒளிர்பூந்தமிழ்,
11 கலைமலி தமிழ்,
12 கலை முத்தமிழ்,
13 குலமார் தமிழ்,
14 குலவேந்தர் செந்தமிழ்,
15 குற்றமில் செந்தமிழ்,
16 குன்றாத்தமிழ்,
17 சங்கமலி தமிழ்,
18 சந்தநிறை தண்டமிழ்,
19 சீர் இன்புறுந்தமிழ்,
20 ஞாலமல்குந் தமிழ்,
21 ஞானத்தமிழ்,
22 தண்டமிழ்,
23 தலமார்தரு செந்தமிழ்,
24 தவமல்கு தமிழ்,
25 திருநெறிய தமிழ்,
26 தளங்கில் தமிழ்,
27 நலங்கொள் தமிழ்,
28 நற்றமிழ்,
29 நாடவல்ல தமிழ்,
30 மாடமலி தமிழ்,
31 பண்ணாருந் தமிழ்,
32 பண்ணியல் தமிழ்,
33 பண்ணுலாம் அருந்தமிழ்,
34 பண்பொலி செந்தமிழ்,
35 பரவிய தமிழ்,
36 பல்பொருள் முத்தமிழ்,
37 பல ஓசைத் தமிழ்,
38 பாரின் மலிகின்ற புகழ்கின்ற தமிழ்,
39 புகழ் வண்டமிழ்,
40 பூந்தமிழ்,
41 பேரியல் இன்தமிழ்,
42 மறைவளருந் தமிழ்,
43 முடிவில் இன்தமிழ்,
44 விலையுடைய அருந்தமிழ்.

No comments:

Post a Comment