Monday 13 October 2014

கோயில்களும் வடமொழி வேதமும்

கோயில்களும் வடமொழி வேதமும்


வடமொழி வேதங்களான இரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களில் எந்த இடத்திலும் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது என்பதை புகழ்பெற்ற தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்பட பல வேத விற்பன்னர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர் சில கீழே காண்க:
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
- RELIGION AND SOCIETY III – Dr.RADHAKRISHNAN





உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர். வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும் ஆகம வழிபாட்டு நெறியைக் கண்டிக்கிறது.
- தமிழர் வரலாறு – பி.டி.சீனிவாச ஐயங்கார்.








ஆகம நெறி, வைதிக நெறிக்கு (சமஸ்கிருத வேத காலத்துக்கு) முற்பட்ட பழமை வாய்ந்தது இன்று ஆகம நெறி வைதிகக் கலப்புக்கு உட்பட்டிருப்பினும் இது தனித்ததோர் நெறியேயாம். சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழியிலிருந்து வந்ததே. இதன் மூலம் – பூ-மலர்-என்பதேயாம். பூவால் செய்யப்படுவது பூசெய் – பூசெய் என்பதே பூஜா, பூஜை என வழங்கப்படுகிறது.
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K.CHATTERJEE




பிற்காலத்தில் வைதிகர்களும் ஆகம நெறிக்கு உரியதான படிம வழிபாடு அதாவது விக்கிரக் வழிபாடு என்பதை மேற்கொண்டபோது அது கூடாது என்று மறுத்து எழுந்ததே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்கள் என்பதும் கோயில்களுக்கும் வடமொழி வேதத்திற்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து கூறுவதாகும்.








பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தமிழ்ப்பாடல்கள் பெற்றவை தாமே ஒழிய இன்றுவரை வடமொழிப்பாடல் பெற்ற தலம் என்று ஒன்றுகூட இல்லாததும் இதை நிறுவும்.




(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

No comments:

Post a Comment