Sunday 11 May 2014

உள்ளங்கை நெல்லிக்கனி

அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில்வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.
உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?

அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.

ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.


No comments:

Post a Comment